தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் 24.04.2013 புதன் இரவு 08.00 மணியளவில், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஜி வாவு எம்.எஸ்.ஜஃபருல்லாஹ் இல்லத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், இந்திய மனித வள மேம்பாட்டுத்துறை மதரசா நவீன கல்வி தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், கூட்டத்தில் ஆற்றிய உரை குறித்து தக்வா சார்பில் அனுப்பப்பட்ட செய்தியை, கடந்த மே மாதம் 05ஆம் தேதியன்று காயல்பட்டணம்.காம் வெளியிட்டிருந்தது.
அதுகுறித்து, அம்மன்றத்தின் செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்:-
அஸ்ஸலாமு அலைக்கும்.
சென்ற மாதம் இ.யூ.முஸ்லிம் லீகின் தமிழ் மாநிலச் செயலாளர் சகோதரர் கே.ஏ.எம்.அபூபக்கர், தக்வா கூட்டத்தில் ஆற்றிய உரையை நான் கோர்வை செய்து எழுதுகையில், “ஐக்கியப் பேரவையில் ஐக்கியமில்லாத அவல நிலை” என்ற சொல் தவறுதலாக இடம்பெற்றுவிட்டது, அந்த வாசகம் அவர் பயன்படுத்தவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு, தக்வா மன்ற செயலாளர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் விளக்கமளித்துள்ளார். |