காயல்பட்டினத்தில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்ட - நகராட்சிக்குட்பட்ட பகுதி குண்டும், குழியுமாக இருப்பதால் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் உள்ளதாகவும், உடனடியாக சீரமைக்குமாறும் காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) சார்பில், நகராட்சியிடம் பலமுறை கோரப்பட்டது.
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அதே கோரிக்கையை, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர், 15.04.2013 அன்று அனுப்பி வைத்தார். அதனடிப்படையில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையருக்கு முதலமைச்சர் தனிப்பிரிவிலிருந்து, 19.04.2013 அன்று இதுகுறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அக்கடிதத்தைப் பெற்றுக்கொண்ட காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார், அதற்கான பதிலை முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு 29.05.2013 அன்று அனுப்பி வைத்துள்ளார்.
மேற்படி ஒருவழிப்பாதை உடனடியாக சீரமைக்கப்படும் என்றும், இன்னும் இரண்டு மாதங்களில் பணி முடிக்கப்படும் என்றும் அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். |