வி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்துப் போட்டிகள், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது. துவக்கப்போட்டி, இம்மாதம் 02ஆம் தேதி மாலையில் நடைபெற்றது.
இப்போட்டியில், கேலரி பேர்ட்ஸ் அணியும், பாங்காக் பால் பஸ்டர்ஸ் அணியும் மோதின. போட்டி முடிவில், ஈரணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தமையால், சமநிலையில் முடிவுற்றது.
ஜூன் 06ஆம் தேதி வரை நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள் குறித்த விபரத்தை, சுற்றுப்போட்டிக் குழு பின்வருமாறு தெரிவித்துள்ளது:-
V-United Sports Club பெருமையுடன் நடத்தும் 5-ம் ஆண்டு காயல் பிரிமியர் லீக் போட்டிகள் கடந்த 2-ம் தேதி முதல் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இப்போட்டிகளின் முடிவுகள் பின்வருமாறு:-
முதல் நாள் நடைபெற்ற போட்டியில் Gallery Birds அணியும், Bangkok Ball Busters அணியும் விளையாடின. இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது. Gallery Birds அணிக்காக காழிஅலாவுத்தீனும், Bangkok Ball Busters அணிக்காக அப்துல் காதர் (இலங்கை) ஆகியோர் கோல் அடித்தார்கள்.
இரண்டாம் நாள் முதல் போட்டியில் Fi-sky Boys அணியும், Knight Riders அணியும் விளையாடின. இப்போட்டியில் Knight Riders அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணிக்காக அஜீஸ் (சவுதிஅரேபியா) மற்றும் B.S.அபு ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
இரண்டாவது போட்டியில் Strange Spikers அணியும், Kayal Chelsea அணியும் விளையாடின. இதில் இரண்டு அணிகளும் ஆட்டநேர இறுதிவரை கோல் எதுவும் அடிக்காததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.
மூன்றாவது போட்டியில் PHM 7 Star அணியும், BGF United அணியும் விளையாடின. இப்போட்டியில் BGF United அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணிக்காக மூஸா ஒரு கோல் அடித்தார்.
போட்டித் தொடரின் மூன்றாம் நாளான 4-ம் தேதி முதல் போட்டியில் Kayal Chelsea அணியும், BGF United அணியும் விளையாடின. இப்போட்டியில் Kayal Chelsea அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இரண்டாவது போட்டியில் Gallery Birds அணியும், PHM 7 Star அணியும் விளையாடின. இப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது. இப்போட்டியில் Gallery Birds அணிக்காக காதர் மற்றும் காழிஅலாவுத்தீன் தலா ஒரு கோலையும், PHM 7 Star அணிக்காக பசீர் மற்றும் வாசிஃப் தலா ஒரு கோலையும் அடித்தனர்.
மூன்றாவது போட்டியில் Bangkok Ball Busters அணியும், Knight Riders அணியும் விளையாடின. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.
நான்காவது போட்டியில் Fi-Sky Boys அணியும், Strange Spikersஅணியும் விளையாடின. இப்போட்டியில் Strange Spikers அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக ஃபாரூக் மற்றும் அஃப்ரஸ் தலா ஒரு கோல் அடித்தனர். அந்த அணிக்காக அஃப்ரஸ் மற்றும் ஃபாரூக் தலா ஒரு கோல் அடித்தனர்.
போட்டித் தொடரின் நான்காம் நாளான 5-ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் Bangkok Ball Busters அணியும், PHM 7 star அணியும் விளையாடின. இப்போட்டியில் இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.
இரண்டாவது போட்டியில் BGF United அணியும், Fi-Sky Boys அணியும் விளையாடின. இதில் BGF United அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணிக்காக B.A.சேக் சுலைமான் (வக்கீல்) மற்றும் ஹனீஃபா தலா ஒரு கோல் அடித்தனர். அந்த அணிக்காக ஹனீஃபா மற்றும் சேக் சுலைமான் (வக்கீல்) தலா ஒரு கோல் அடித்தனர்.
மூன்றாவது போட்டியில் Knight Riders அணியும், Strange Spikers அணியும் விளையாடின. இதில் இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.
நான்காவது போட்டியில் Gallery Birds அணியும், Kayal Chelsea அணியும் விளையாடின. இப்போட்டியில் Gallery Birds அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. Gallery Birds அணிக்காக காழிஅலாவுத்தீன் மற்றும் இஸ்மாயில் தலா ஒரு கோலையும், Kayal Chelsea அணிக்காக நதீர் ஒரு கோலையும் அடித்தனர்.
போட்டித் தொடரின் ஐந்தாம் நாளான 6-ம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் PHM 7 Star அணியும், Strange Spikers அணியும் விளையாடின. இதில் PHM 7 Star அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக பசீர் ஒரு கோல் அடித்தார்.
இரண்டாவது போட்டியில் Kayal Chelsea அணியும், Bangkok Ball Busters அணியும் விளையாடின. இப்போட்டியில் Kayal Chelsea அணியினர் 1-0 என்ற கோல் கணககில் வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக ரிஃபாய் ஒரு கோல் அடித்தார்.
போட்டித் தொடரின் ஐந்தாம் நாளான இன்று (07/06/2013) மாலை நடைபெற்ற முதல் போட்டியில் Gallery Birds அணியும், Fi-Sky Boys அணியும் விளையாடின. இப்போட்டியில் Gallery Birds அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர். காழி அலாவுத்தீன் ஒரு கோலையும், அமீர் இரண்டு கோலையும் அடித்தார்கள்.
இன்றைய போட்டியின் சிறப்பு அழைப்பாளராக K.A.மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.R.பாண்டியராஜன் M.Sc., M.Ed., M.Phil அவர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு இரண்டாவது போட்டியின் துவக்கத்தில் BGF United அணியும், Knight Riders அணி வீரர்களை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
இப்போட்டியில் BGF United அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணிக்காக ஷரீஃப் ஒரு கோலை அடித்தார்.
போட்டித் தொடரின் ஆறாம் நாளான நாளை (08/06/2013) காலை நடைபெற உள்ள முதல் போட்டியில் Bangkok Ball Bustersஅணியும், Fi-Sky Boys அணியும் விளையாட உள்ளன. இரண்டாவது போட்டியில் Strange Spikers அணியும், BGF United அணியும் விளையாட உள்ளன.
மாலை நடைபெற உள்ள முதல் போட்டியில் Gallery Birds அணியும், Knight Riders அணியும் விளையாட உள்ளன. இரண்டாவது போட்டியில் PHM 7 Star அணியும், Kayal Chelsea அணியும் விளையாட உள்ளன.
அணியினர் மற்றும் விளையாட்டுப் போட்டியின் படக்காட்சிகள் வருமாறு:-
இவ்வாறு, வி-யுனைட்டெட் கே.பி.எல். சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.ஜஹாங்கீர் |