காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 86ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 10.05.2013 வெள்ளிக்கிழமை (இன்று) இரவு 07.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கி, இன்று அபூர்வ துஆ பிரார்த்தனையுடன் நிறைவுறுகிறது.
நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படும்.
ரஜப் 29ஆம் நாள் (ஜூன் 09ஆம் தேதி - நேற்று) நிகழ்ச்சி, காலையில் துவங்கியது. நேற்று ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ வழங்கினார்.
ஹதீது கலை, நபிகளாரிலிருந்து சங்கிலித் தொடரின் அடிப்படையில் மார்க்கத்தைப் பேண வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட தலைப்புகளில் அந்த உரை அமைந்திருந்தது.
அவரைத் தொடர்ந்து, இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சரித உரையை, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்ழரீ வழங்கினார்.
நேற்று மாலை 04.30 மணிக்கு, இமாம் புகாரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மீது, மாதிஹுல் புகாரீ அல்லாமா அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் முஹம்மது இஸ்மாஈலுந் நஹ்விய்யுல் முஃப்தீ அவர்களால் தொகுக்கப்பட்ட மின்ஹத்துல் பாரீ ஃபீ மித்ஹதில் புகாரீ எனும் மவ்லிதும், முஸ்லிம் இமாம் மீதான பைத்தும், மவ்லவீ ஹாஃபிழ் கே.எஸ்.கிதுறு முஹம்மத் ஃபாஸீ தலைமையில் நடைபெற்றது. காயல்பட்டினம் ஷெய்கு ஹுஸைன் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் என்.டி.ஷெய்கு சுலைமான் லெப்பை துஆவுடன் நேற்றைய நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
இன்று அதிகாலை 05.15 மணிக்கு, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மாணவர் ஹாஃபிழ் ஏ.ஆர்.அப்துல் காதிர் வாஃபிக் கிராஅத் ஓதி நிறைவுநாள் நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்கிறார்.
அதிகாலை 05.20 மணிக்கு, ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்தின் நிறைவுப் பகுதியை, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளிவாசல் மற்றும் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் ஆகியவற்றின் தலைவர் ஹாஜி நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம் துவக்கி வைக்கிறார்.
இன்று காலை 08.40 மணிக்கு, இன்று ஓதப்பபட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, ஹாமிதிய்யா பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ வழங்குகிறார்.
காலை 09.15 மணிக்கு, “கூட்டு துஆவின் சிறப்புகள்” என்ற தலைப்பில், ஹாங்காங் கவ்லூன் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.கே.ஷுஅய்ப் நூஹ் மஹ்ழரீ உரை நிகழ்த்துகிறார்.
காலை 10.00 மணிக்கு, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக் கல்லூரி மாணவர் மவ்லவீ எம்.நிஷாத், மலையாள மொழியில் உரை நிகழ்த்துகிறார்.
காலை 10.15 மணிக்கு, நிறைவு நாள் நிகழ்ச்சி அறிமுகத்தை ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் வழங்குகிறார்.
காலை 10.30 மணிக்கு, புனித மக்கா ஷரீஃப் முஃப்தீ இமாம் மவ்லானா செய்யித் அஹ்மதிப்னு ஜெய்னீ தஹ்லான் ரஹ்மத்துல்லாஹி அவர்களால் கோர்வை செய்யப்பட்ட கத்முல் புகாரி ஷரீஃப் எனும் அபூர்வ துஆ பிரார்த்தனையை, மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ இறைஞ்சுகிறார்.
அத்துடன், இன்றைய காலை நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுறும்.
இன்று மாலை 04.30 மணிக்கு, ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.அஹ்மத் ஜமீல் கிராஅத் ஓதி மாலை நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்கிறார்.
மாலை 04.35 மணிக்கு, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸுப்ஹான மவ்லித் புகழ்மாலை, மவ்லவீ என்.எச்.பி.நவாஸ் மிஸ்பாஹீ தலைமையில் ஓதப்படுகிறது. ஹாஜி டி.எஸ்.ஏ,ஜெஸீமுல் பக்ரீ துஆவுடன் மாலை அமர்வை நிறைவு செய்கிறார்.
அதனைத் தொடர்ந்து, மாலை 05.35 மணிக்கு, ஏலம் விடும் நிகழ்ச்சியை, எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டி.எம்.) ஹாஜி எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் வழங்குகின்றனர்.
இன்றிரவு 07.00 மணிக்கு, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவன மாணவர்கள் வழங்கும் - இமாம் புகாரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் வரலாற்றை உரைக்கும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இரவு 08.45 மணிக்கு, மாதிஹுல் கவ்து மர்ஹூம் அல்லாமா சே.கு.நூஹுத்தம்பி ஆலிம் முஃப்தீ அவர்களால் கோர்வை செய்யப்பட்ட ராத்திபத்துல் அஹ்மதிய்யா எனும் திக்ர் மஜ்லிஸ், காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளியின் இமாம் ஹாஜி டி.எம்.கே.முத்து செய்யித் அஹ்மத் தலைமையில் நடைபெறும்.
இரவு 09.45 மணிக்கு, ஹாமிதிய்யா மாணவர் ஹாஃபிழ் என்.ஏ.ஸாலிஹ் நுஸ்கீ கிராஅத் ஓதுகிறார். இரவு 09.50 மணிக்கு, மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் கட்டிட வளாக வளைவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள நபிமொழிகளுக்கான விளக்கவுரையையும், மஜ்லிஸ் உருவான வரலாறு மற்றும் அதன் சேவைகள் பற்றியும், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ உரை நிகழ்த்துகிறார்.
இரவு 10.30 மணிக்கு, மஜ்லிஸின் நடப்பாண்டு வைபவக் கமிட்டி தலைவர் ஹாஜி ஏ.எல்.முஹம்மத் நிஜார் நன்றி கூற, ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸா முதன்மை ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.அபூபக்கர் ஸித்தீக் மிஸ்பாஹீ துவுடன் நடப்பாண்டின் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுறும்.
நாளை, 11.06.2013 செவ்வாய்க்கிழமை காலை 06.00 மணி முதுல் 08.30 மணி வரை அனைவருக்கும் தபர்ருக் - நேர்ச்சை வினியோகிக்கப்படவுள்ளது.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
நடப்பாண்டில் ஒவ்வொரு நாளும் ஆற்றப்படும் உரைகளின் ஒலிப்பதிவுகளையும், முந்தைய ஆண்டுகளில் ஆற்றப்பட்ட உரைகளின் ஒலிப்பதிவுகளையும், http://www.bukhari-shareef.com/eng/audio/6/rajab-bayan-2013.html என்ற இணையதள பக்கத்தில் கேட்கவும், பதிவிறக்கம் செய்துகொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
ரஜப் 28ஆம் நாள் நிகழ்வுகள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |