நடந்து முடிந்த CENTRAL BOARD OF SECONDARY EDUCATION 2013 (SSE) மத்திய கிழக்கு பிராந்தியத் தேர்வின் முடிவு (Board Based) மே மாதம் 30ஆம் தேதி வியாழக்கிழமையன்று வெளியானது.
இம்முடிவுகளின்படி, சஊதி அரபிய்யா ரியாத் நகரிலுள்ள அல்-யாஸ்மின் இன்டர்நேஷனல் பள்ளில் பயின்ற - காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சார்ந்த எஸ்.டி.செய்யித் முஹம்மத் அலீ - குளம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோரின் பேரனும், முஹ்யித்தீன் சதக்கத்துல்லாஹ் - குளம் ஹாஜரா பீவி ஆகியோரின் மகனுமான ஹாஃபிழ் அப்துர்ரஹ்மான்,
ரியாத் அல்-யாரா இன்டர்நேஷனல் பள்ளில் பயின்ற - காயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்த மர்ஹூம் பீனா அபுல் ஹஸன் மற்றும் மர்ஹூம் பிரபு ஷேக் தாவூத் ஆகியோரின் பேரனும், ஷாதுலி அபுல் ஹசன் - பிரபு நஃபீஸத் தாஹிரா ஆகியோரின் மகனுமான ஹாஃபிழ் முஹம்மத் ஷாதுலீ,
ஆகிய இரண்டு ஹாஃபிழ் மாணவர்கள் பத்துக்கு பத்து புள்ளிகள் (CGPA = 10) பெற்று A1 தகுதியில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவர்களைப் போன்று மதிப்பெண் பெற்றவர்களை, கடந்த மே மாதம் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று, ரியாதில் வெளியான சந்திரிகா மலையாள நாளேட்டில் பாராட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த இரு மாணவர்களும் பள்ளிப் படிப்பை இடைநிறுத்தம் செய்யாமல், ரியாத் நகரிலுள்ள அல்-ஜாமியா ஹுறைசில் சம காலத்தில் ஹாஃபிழ் பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
சந்திரிகா மலையாள நாளேடு மூலமாக
ரியாதிலிருந்து அபு அஹ்மத் சோனா |