சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்களால், வீரபாண்டியன்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில், “விஸ்டம் பப்ளிக் ஸ்கூல்” என்ற பெயரில் பள்ளிக்கூடம் கட்டப்பட்டு வருகிறது. முதற்கட்ட கட்டிடப் பணிகள் நிறைவுற்றதையடுத்து, புதிய கட்டிட துவக்க விழா, இம்மாதம் 09ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30 மணியளவில் நடைபெற்றது.
பள்ளியை நிர்வகிக்கும் விஸ்டம் எஜுகேஷனல் அறக்கட்டளையின் அறங்காவலர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் கே.எம்.ஏ.ஷேக் முஹம்மத் கிராஅத் ஓதி விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். விழாவிற்குத் தலைமை தாங்கிய - அறக்கட்டளையின் தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் தலைமையுரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, அறக்கட்டளை செயலாளர் ஹாஜி ஏ.ஏ.சி.நவாஸ் அஹ்மத், பள்ளிக்கூடம் குறித்து அறிமுகவுரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, வீரபாண்டியன்பட்டினம் ஊராட்சி மன்றத் தலைவர் நடராஜன், பேராசிரியர் சுப்பிரமணியன், முனைவர் தமீமுல் அன்ஸாரீ, விஸ்டம் பள்ளியின் தலைமையாசிரியரும், எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியருமான எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பள்ளியின் அறங்காவலர் ஜெ.செய்யித் ஹஸன் நன்றி கூற, கஃப்பாரா துஆவுடன் விழா நிறைவுற்றது.
முன்னதாக, விஸ்டம் பள்ளிக்காக இலச்சினை மற்றும் முழக்கம் (Logo and Slogan) உருவாக்கியளிக்கும் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் தேர்வு செய்யப்பட்ட இலச்சினை மற்றும் முழக்கம் ஆகியன விழா மேடையிலிருந்தவாறு பார்வையாளர்கள் அனைவருக்கும் காண்பிக்கப்பட்டதோடு, அவற்றை உருவாக்கியளித்தோருக்கு இவ்விழாவின்போது பணப்பரிசு வழங்கப்பட்டது.
இவ்விழாவில், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், கே.எம்.டி. மருத்துவமனை தலைவர் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, இக்ராஃ கல்விச் சங்க பொருளாளர் கே.எம்.டி.சுலைமான், அதன் துணைச் செயலாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, அதன் நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், துபை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் விளக்கு தாவூத், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், அப்பா பள்ளி தலைவர் ஹாஜி எம்.எஸ்.கே.எஸ்.மரைக்கார், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி துணைச் செயலாளர் வாவு எஸ்.ஏ.ஆர்.அஹ்மத் இஸ்ஹாக், ஓமன் காயல் நல மன்ற நிர்வாகி ஹாஜி எஸ்.ஏ.கே.நூருத்தீன், ஜெய்ப்பூர் காயல் நல மன்ற (ஜக்வா) தலைவர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதாஹிர், நகரப் பிரமுகர்களான ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூதல்ஹா, ஹாஜி கே.வி.முஹம்மத் ஃபாரூக், ஹாஜி ஏ.எஸ்.ஜமால் முஹம்மத், ஹாஜி ஏ.கே.பீர் முஹம்மத், ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, எழுத்தாளர் ஏ.லெப்பை ஸாஹிப், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக், டாக்டர் எம்.அபுல்ஹஸன், ஹாஜி எஸ்.மூஸா ஸாஹிப், ஹாஜி எஸ்.எம்.அமானுல்லாஹ் உள்ளிட்டோரும், பள்ளி மாணவ-மாணவியரின் பெற்றோரும் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு விழா மேடையின் கீழ்ப்பகுதியில் தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக, நிகழ்வு நாளன்று காலையில், பள்ளி மாணவ-மாணவியரின் பெற்றோருடன் கலந்தாய்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், பள்ளியில் மாணவ-மாணவியருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், வகுப்பை விளக்கங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பெற்றோரிடம் எதிர்பார்க்கப்படும் ஒத்துழைப்புகள் உள்ளிட்டவை குறித்து விரிவான தகவல்கள் வழங்கப்பட்டன.
இம்மாதம் 11ஆம் தேதியன்று, புதிய கல்வியாண்டின் முதல் நாள் வகுப்புகள் துவங்கின. துவக்க நாளென்பதால், மாணவ-மாணவியர் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தது கண்ணைக் கவரும் வகையில் அமைந்திருந்தது.
கள உதவி & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 08:28 / 13.06.2013] |