குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) தொடர்பாக, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கு பின்வருமாறு அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது:-
2010ஆம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள விபரங்கள் சேகரிக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ஒரு ஒப்புகை சீட்டு பத்திரமாக வைத்திருக்கும் படி வழங்கப்பட்டது.
அதன்பின், மக்கள் பதிவேடு ஸ்கேன் செய்யப்பட்டு அதிலுள்ள பதிவுகள் கணினி மூலம் பதிவு செய்யும் பணி முடிவு பெற்றது. இதன் அடுத்தகட்ட பணியான குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) வழங்குவதற்கு பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணி ஆரம்பமாகியுள்ளது.
திருசெந்தூர் வட்டம் காயல்பட்டணம் நகராட்சியில் ஒவ்வொரு குடும்பத்திலும் எட்டு வயதிற்கு மேற்பட்ட நபர்களின் புகைப்படங்கள், பத்து விரல்களின் கைரேகை பதிவுகள் மற்றும் விழித்திரை பதிவு செய்யும் பணியானது, பெங்களுர் பாரத் எலக்ட்ரானிக் நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ள அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட உள்ளது.
காயல்பட்டணம் நகராட்சியில் முதல் கட்ட முகாம் ஒருசில தினங்களில் வார்டு வாரியாக ஆரம்பமாக உள்ளது. ஒவ்வொரு வார்டுகளிலும் முகாம் நடைபெறும் இடம், தேதி ஆகியன குறித்த விரிவான விபரங்கள் அறிய, உங்கள் வார்டு உறுப்பினரைத் தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஜூன், ஜூலை 2010இல் கொடுக்கப்பட்டுள்ள ஒப்புகைச் சீட்டினை எடுத்துக்கொண்டு, அந்தந்த வார்டு மக்கள் அவர்கள் பகுதியில் நடைபெறும் முகாமுக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். முகாமிற்கு வரும்பொழுது எடுத்து வர வேண்டிய ஆவணங்கள்:-
1. தனிநபர் வாக்காளர் அடையாள அட்டை
2. குடும்ப அட்டை
3. நிரந்தர கணக்கு எண் அட்டை (Pan Card)
4. ஓட்டுனர் உரிமம் (Driving Licence)
>> உங்களுடைய பெயர்களில் திருத்தம் செய்ய வேண்டியதிருந்தால், குழப்பங்களைத் தவிர்க்க சரியான முறையில் பெயர்களை எழுதி எடுத்து வரவும்..
>> ஒப்புகைச் சீட்டு தொலைந்திருந்தால், முகாமிற்கு வெளியே உள்ள பட்டியலில் பெயர் இருந்தால் - அதற்கான தொடர் எண்ணை முகாம் மேற்பார்வையாளரிடம் தெரிவித்து, புகைப்படம் மற்றும் பதிவுகளை செய்துகொள்ளலாம்.
>> தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இடம்பெற்று, பிரத்தியேக அடையாள எண் பெற இந்த வாய்ப்பினை தவறவிடாமல் பயன்படுத்திகொள்ளவும்.
குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) பெறுவது கீழ்கண்ட நிகழ்வுகளுக்கு பயன்படும்:-
1. உங்களது அடையாளத்தை நிரூபிக்க
2. அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் இதர சலுகைகள் பெற உதவும்
3. வயது மற்றும் பிறந்த தேதியினை நிரூபிக்கவும்
4. வங்கி கணக்குகள் தொடங்க, பாஸ்போHட் பெற, குடும்ப அட்டை பெற, வாகன பதிவுகள் செய்ய, தொலைபேசி, கைபேசி, எரிவாயு இணைப்பு பெற திருமணம் மற்றும் நிலங்கள் விற்பதை / வாங்குவதைப் பதிவுகள் செய்துகொள்ளலாம்.
மேலும், தமிழக அரசால் இனி வழங்கப்பட உள்ள புதிய குடும்ப அட்டையானது, இக்காh;டுக்காக சேகாpக்கப்படும் தகவல் தொகுப்பினை பயன்படுத்தியே வழங்கப்பட உள்ளதால், பதிவு செய்ய தவறும் பட்சத்தில், புதீpய குடும்ப அட்டை பெறும் வாய்ப்பினை இழந்து விட நேரிடும் என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.
2010இல் பதிவு செய்யப்பட்ட பெயர்களுக்கு மட்டுமே இம்முகாமில் புகைப்படம் மற்றும் பதிவுகள் செய்யப்படவுள்ளது.
குடும்பத்தில் உள்ள எந்த ஒரு நபரின் பெயராவது முன்பு கணக்கெடுக்கப்படாவிட்டாலும், கணக்கெடுப்பு பகுதிக்கு புதிதாக வந்த நபராக இருந்தாலும், இம்முகாமிற்கு வந்து, தேசிய மக்கள் தொகை பதிவேடு அட்டவணை படிவத்தினை புதிதாக இம்முகாமில் பூர்த்தி செய்து கொடுக்கலாம்;. காயல்பட்டணம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் தொடர்பு கொள்ள,
2010ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வழங்கப்பட்ட ஒப்புகைச் சீட்டு மாதிரி:-
இவ்வாறு, காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |