சில ஆண்டுகளுக்கு முன் காயல்பட்டினத்தில் பெரும்பாலான மக்களைத் தாக்கிய சிக்குன்குனியா நோயின் விளைவாக, வயது வேறுபாடின்றி பல பொதுமக்கள் மூட்டுக்கால் வேதனையால் அவதியுற்று வருகின்றனர்.
இதனைக் கருத்திற்கொண்டு, நகரில் புனரமைக்கப்பட்ட மற்றும் புதிதாகக் கட்டப்பட்ட பெரும்பாலான பள்ளிவாசல்களில் நின்ற நிலையில் - உளூ (சுத்தம் செய்தல்) செய்யும் வகையில் அங்குள்ள ஹவுள் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில், குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் உளூ செய்யும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ஹவுள் அகற்றப்பட்டு, அதே இடத்தில் - நின்ற நிலையில் உளூ செய்யும் வகையில் புதிய ஹவுள் கட்டி முடிக்கப்பட்டு, பணி நிறைவுக்காக காத்திருக்கிறது.
|