காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சேர்ந்த, ஹாஜி கத்தீபு எம்.ஏ.ஸாஹிப் தம்பி, இன்று காலை 09.00 மணியளவில், சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58.
அன்னார், மர்ஹூம் கத்தீபு முஹம்மத் அப்துல் காதிர் - லெப்பைக்குட்டி என்பவரின் மகனும்,
மர்ஹூம் விளக்கு செய்யித் அஹ்மத் என்பவரின் மருமகனும்,
ஹாஜி கத்தீபு செய்யித் அபூதாஹிர், ஹாஜி கத்தீபு பாதுல் அஸ்ஹப், ஹாஜி கத்தீபு செய்யித் முஹம்மத் புகாரீ ஆகியோரின் சகோதரரும்,
ஹாஜி கத்தீபு எஸ்.டி.முஹம்மத் அப்துல் காதிர் - லெப்பைக்குட்டி என்பவரின் தந்தையும்,
ஹாஜி கத்தீபு கே.எம்.ஏ.செய்யித் அஹ்மத் என்பவரின் மாமனாரும்,
மர்ஹூம் பி.எஸ்.முஹம்மத் முஹ்யித்தீன், பி.எஸ்.அபூஸாலிஹ், மர்ஹூம் பி.எஸ்.சுல்தான் அப்துல் காதிர் ஆகியோரின் மருமகனும்,
மர்ஹூம் ஹாஜி பி.எஸ்.ஷாஹுல் ஹமீத், மர்ஹூம் எம்.டி.எஸ்.காதர் உதுமான், ஜெ.முஹம்மத் அபூபக்கர் ஆகியோரின் மைத்துனரும்,
ஹாஜி விளக்கு சுஹ்ரவர்த்தீ, ஹாஜி விளக்கு தாவூத் ஆகியோரின் மச்சானும்,
கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் தலைவர் “ஜுவெல் ஜங்ஷன்” கே.அப்துர்ரஹ்மானின் தாய்மாமாவும்,
ஹாஜி கத்தீபு அப்துல் காதிர், ஹாஜி ஈஸா, தி.நகர் எல்.கே.எஸ்.கோல்டு ஹவுஸ் அதிபர் ஹாஜி எல்.கே.எஸ்.செய்யித் அஹ்மத் ஆகியோரின் சகலையுமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று (ஜூன் 12 புதன்கிழமை) மாலை 05.00 மணியளவில், சென்னை - புரசைவாக்கம் - தானா தெரு பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
‘கோமான்’ மீரான் |