காயல்பட்டினம் கோமான் ஜமாஅத் இளைஞர்களால் நடத்தப்பட்டு வரும் நியூ கோமான் நற்பணி மன்றம் சார்பில், வழமை போல இவ்வாண்டும் - நகரின் ப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு சாதனை மாணவ-மாணவியர் மற்றும் கோமான் ஜமாஅத் அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியர், ஆலிம் - ஆலிமா, ஹாஃபிழ் - ஹாஃபிழா ஆகியோரைப் பாராட்டி பரிசுகள் வழங்கும் விழா இம்மாதம் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணியளவில், கோமான் நடுத்தெருவில் நடைபெறுகிறது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையேற்கும் இவ்விழாவில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எம்.துரை, நெல்லை ஷிஃபா மல்டி சிறப்பு மருத்துவமனையின் இயக்குநரும், ஷிஃபா கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான ஹாஜி எம்.கே.எம்.ஷாஃபி ஆகியோர் சிறப்பழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு, வாழ்த்துரை வழங்கி, பரிசளிக்கவுள்ளனர்.
இவ்விழாவில், நகரனி் அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர்கள் முன்னிலை வகிக்கவுள்ளனர்.
கோமான் ஜமாஅத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியருக்கு கல்வியின் மீது ஆர்வத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்குடன் நடத்தப்படும் இவ்விழாவில், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் திரளாகக் கலந்துகொள்ளுமாறு, விழாக்குழுவினர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. |