காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT) சார்பில், நாகர்கோயில் ஜெயசேகரன் மருத்துவமனையுடன் இணைந்து, இம்மாதம் 09ஆம் தேதியன்று - மருத்துவ பரிசோதனை இலவச முகாம், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது.
முகாம் துவக்க நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவர் ஹாஜி எஸ்.ஐ.அபூபக்கர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் இஸ்ஸத்தீன், ஆலோசகர் ஹாஜி எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ, சுல்தான், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் தலைவர் ஹாஜி எஸ்.ஐ.தஸ்தகீர், எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினரும், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆசிரியருமான மீராத்தம்பி நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஹிஷாம் இறைமறை வசனங்களையோதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். அறக்கட்டளை இணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார். துணைச் செயலாளர் எம்.என்.அஹ்மத் ஸாஹிப் அறிமுகவுரையாற்றினார்.
பின்னர், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வாழ்த்துரை வழங்கினார்.
அவரைத் தொடர்ந்து, நாகர்கோயில் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் தேவபிரசாத் ஜெயசேகரன் உரையாற்றினார்.
பின்னர், முகாமில் பங்கேற்கும் மருத்துவக் குழுவினருக்கு, காயல்பட்டினம் நல அறக்கட்டளை சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, இம்முகாமை நடத்தித் தருவதற்காக - அறக்கட்டளை சார்பில் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனைக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அறக்கட்டளை தலைவர் ஹாஜி எஸ்.ஐ.அபூபக்கர் நினைவுப் பரிசை வழங்க, டாக்டர் தேவபிரசாத் ஜெயசேகரன் அதனைப் பெற்றுக்கொண்டார்.
மொகுதூம் நெய்னா நன்றி கூற, அத்துடன் துவக்க நிகழ்ச்சி நிறைவுற்றது. பின்னர் முகாம் துவங்கியது. இம்முகாமில், டாக்டர் தேவபிரசாத் ஜெயசேகரன் (Urology), டாக்டர் மாயா கோபால் (Gynaecology), டாக்டர் சாமுவேல் அற்புதராஜ் (Urology), டாக்டர் சரவணன் (Orthopaedics), டாக்டர் இளஞ்செழியன் (Orthopaedics), டாக்டர் சந்திரகுமார் இம்மானுவேல் (Cardiology), டாக்டர் கீதா நாராயணன் (Gynaecology) ஆகியோர் கலந்துகொண்டு, இருதய நோய், பித்தப்பை கோளாறு, சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர்.
இம்முகாமில், காயல்பட்டினத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு, மருத்துவ ஆலோசனை பெற்றனர்.
முகாம் ஏற்பாட்டுப் பணிகளில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் காயல்பட்டினம் கிளை, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் காயல்பட்டினம் கிளை, காக்கும் கரங்கள் நற்பணி மன்றம், சமூக நல்லிணக்க மையம் உள்ளிட்ட அமைப்பினரும், பெண் தன்னார்வலர்களும் துணைப்பணியாற்றினர்.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் |