மேலே உள்ள படங்களில் முதல் இரண்டு படங்கள், காயல்பட்டினம் சொளுக்கார் தெருவில் பதிவு செய்யப்பட்டவையாகும். ஒரு வீட்டின் மாடியிலுள்ள தண்ணீர் தொட்டியிலிருந்து குழாய் வழியே வழிந்தோடும் நீரை, காகம் ஒன்று பருகிய காட்சிதான் அது.
கடைசி இரண்டு படங்கள், காயல்பட்டினம் கடற்கரை தொழுமிடத்தில் – கிணற்றடியில் பதிவு செய்யப்பட்டது. தொழுகைக்காக பலர் உளூ (சுத்தம்) செய்துகொண்டிருந்த நிலையிலும், எதையும் கண்டுகொள்ளாமல் இரண்டு மாடுகள் தன் தாகத்தைத் தீர்ப்பதை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு, பாத்திரத்திற்குள் வாய்விட்டு, தண்ணீர் பருகிய காட்சிகள்.
முதலில் அங்கிருந்தவர்கள் மிரண்டபோதிலும், பின்னர் மாட்டின் தாகத்தை உணர்ந்தவர்களாக, குழாயில் தண்ணீர் பிடித்து, பாத்திரத்தில் ஊற்றி, மாட்டின் தாகத்தைத் தீர்க்கத் துவங்கிவிட்டனர்.
|