காயல்பட்டினம் துளிர் பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் ஆயிஷா ஸாஹிப் தம்பியின் கணவரும், காயல்பட்டினம் மகுதூம் தெருவைச் சேர்ந்தவருமான, ஹாஜி கத்தீபு எம்.ஏ.ஸாஹிப் தம்பி, நேற்று (ஜூன் 12) காலை 09.00 மணியளவில், சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58.
அன்னாரின் ஜனாஸா, இன்று (ஜூன் 12 புதன்கிழமை) மாலை 05.00 மணியளவில், சென்னை - புரசைவாக்கம் - தானா தெரு பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்குமுகமாக, இன்று (ஜூன் 13 வியாழக்கிழமை) மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் முஹ்யித்தீன் பள்ளியில், அவரது குடும்பத்தினருடன் கைலாகு செய்துகொள்ளும் (ஸலாம் கொடுக்கும்) நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
தகவல்:
‘ஜுவெல் ஜங்ஷன்’ K.அப்துர்ரஹ்மான் |