இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சருக்கு தந்தி அனுப்பும் போராட்டம், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் இம்மாதம் 08 முதல் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது
இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொதுச் செயலாளர் அப்துல் காதர் வெளியிட்டுள்ள அறிக்கை:-
எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் பிரதமர், குடியரசு தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு தந்தி அனுப்பும் போராட்டம் நடைபெற்று வருகிறது
யுஏபிஏ சட்டத்தினை திரும்ப பெற கோரியும், அப்பாவி முஸ்லீம்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் தந்தி கொடுக்கப்படுகிறது. தந்தி சேவை நிறுத்தப்பட இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் இந்த போராட்டம் வரலாற்றில் பதிவு செய்யப்படும்.
யுஏபிஏ சட்டத்தினை திரும்ப பெற கோரி ஜூன் 08 முதல் 18 வரை இந்தியா முழுவதும் போஸ்டர் பிரசாரம், பேரணி, நோட்டீஸ் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் தந்தி அனுப்பும் போராட்டம் நேற்று (ஜூன் 13) நடைபெற்றது. இதில் அதிகமானோர் கலந்துகொண்டு தந்தி அனுப்பினர்.
இதில் எஸ் டி பி ஐ கட்சியின் தூத்துக்குடி மாவட்ட தலைவர் காதர் முஹைதீன், செயற்குழு உறுப்பினர்கள் காஜா ,அமுல்தீன் தொகுதி தலைவர் மாமுநைனா தொகுதி செயலாளர் மைதீன் கனி மற்றும் உறுப்பினர்கள் பரவலாக கலந்து கொண்டனர்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |