காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியரான எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, 31.05.2013 அன்று பணி நிறைவு பெற்றதையடுத்து, அவருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி, இம்மாதம் 03ஆம் தேதியன்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது அந்நிகழ்ச்சியில், அவர் உருக்கமான உரையும் நிகழ்த்தினார்.
இதுகுறித்த செய்தியை காயல்பட்டணம்.காம் விரிவாக வெளியிட்டிருந்தது. அச்செய்தியின் வாசகர் கருத்துப்பதிவு பகுதியில், தன்னை வாழ்த்தியும், பாராட்டியும் கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து, அவர் பின்வருமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார்:-
அன்பான எனது முன்னாள் - இந்நாள் மாணவர்களுக்கும், என் மீது அபிமானம் கொண்டுள்ள அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனதன்பான அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், நமது எல்.கே.மேனிலைப்பள்ளியில் நான் ஆசிரியராகவும், தலைமையாசிரியராகவும் பணியாற்றி, தற்போது பணி நிறைவு பெற்றுள்ளதையொட்டி, எனது பணியைப் பாராட்டியும், வாழ்த்தியும் கருத்துப்பதிவு செய்துள்ள மற்றும் என்னிடம் நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்திய என் அன்பிற்கும், பாசத்திற்குமுரிய மாணவர்கள் மற்றும் அபிமானிகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
உங்கள் அனைவரது வாழ்வையும் வல்ல அல்லாஹ் ஒளிமயமாக்கி வைப்பானாக. ஜஸாக்குமுல்லாஹு கைரா!
இவ்வாறு, எல்.கே.மேனிலைப்பள்ளியின் பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |