விவசாயத்திற்கும், குடிநீர் விநியோகத்திற்கும் - இந்தியா, பெரும் அளவில் வட கிழக்கு/ தென் மேற்கு பருவமழைகளையே நம்பியுள்ளது. அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் பெய்யும் வட கிழக்கு பருவ மழை இவ்வாண்டு பொய்த்ததால், ஜூன் - செப்டம்பர் மாதங்களில் பெய்யும் தென் மேற்கு பருவமழை இயல்பாக இருக்கவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு நாடு முழுவதும் உள்ளது.
தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் வாரம் தென் மேற்கு பருவமழை துவங்கியது. காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் இன்று முதல் - தினசரி மழை அளவு தகவல் வெளியிடப்படும். தென் மேற்கு பருவமழையின் போக்கு - காயல்பட்டினத்திற்கான குடிநீர் விநியோகத்தை நேரடியாக பாதிக்கும் என்ற அடிப்படையில் இந்த தகவல் வழங்கப்படுகிறது.
ஜூன் 14, 2013 அன்று (காலை 8:30 முடிய) ...
(a) மாநில அளவில் ...
இயல்பு மழை அளவு: 2.8 mm
பெய்த மழை அளவு: 1.5 mm
இயல்பை விட கூடுதல் / குறைவு: -47%
(b) தூத்துக்குடி மாவட்டத்தில் ...
இயல்பு மழை அளவு: 0.3 mm
பெய்த மழை அளவு: 0 mm
இயல்பை விட கூடுதல் / குறைவு: -100%
(c) திருநெல்வேலி மாவட்டத்தில் ...
இயல்பு மழை அளவு: 0.9 mm
பெய்த மழை அளவு: 12.9 mm
இயல்பை விட கூடுதல் / குறைவு: +1331%
ஜூன் 1 - ஜூன் 14, 2013 வரை
(a) மாநில அளவில் ...
இயல்பு மழை அளவு: 25.5 mm
பெய்த மழை அளவு: 32.1 mm
இயல்பை விட கூடுதல் / குறைவு: +26%
(b) தூத்துக்குடி மாவட்டத்தில் ...
இயல்பு மழை அளவு: 4.5 mm
பெய்த மழை அளவு: 0.6 mm
இயல்பை விட கூடுதல் / குறைவு: -87%
(c) திருநெல்வேலி மாவட்டத்தில் ...
இயல்பு மழை அளவு: 16.9 mm
பெய்த மழை அளவு: 55.8 mm
இயல்பை விட கூடுதல் / குறைவு: +230%
|