காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில்
143 அடி அளவு வரை - நீரினை தேக்கி வைக்கலாம்.
அணையின் ஜூன் 15 நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 72.60 அடி (69.60 அடி) நீர்வரத்து (Inflow): 1968 Cusecs (2495 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 205 Cusecs (205 Cusecs) மழையின் அளவு - 40 mm (86 mm)
(கடந்த ஆண்டு) ஜூன் 15, 2012 நிலவரம் ...
அணையில் நீர்மட்டம்: 21.65 அடி நீர்வரத்து (Inflow): - 80 Cusecs நீர் வெளியேற்றம் (Outflow): - 30 Cusecs மழையின் அளவு - 0 mm
3. நீர் இன்றி அமையாது உலகு! posted byMauroof (Dubai)[15 June 2013] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28047
இறைவனின் அருள் மழைப் பொழிவு, பாபநாசம் அணையின் தற்போதைய நீர்மட்டம் குறித்த செய்தி மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
விரைவில் இந்த அணையின் முழு கொள்ளளவும் நிறையும் வகையில் மழை பொழிந்து தென் மாவட்ட மக்களின்/ஜீவராசிகளின் குடிநீர் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் தீர எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
மாநிலத்தில் வறட்சிகள் ஒருபுறமிருக்க, ஜீவநதிகள்/ஆறுகள் ஆக்கிரமிப்புகளுக்கு ஆளாக்கப்படுவதும், மனசாட்சியே இன்றி மாசுபடுத்தப்படுவதும் மற்றொரு பக்கம் வெகு வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த கருத்தை பதிந்து கொண்டிருக்கும் சமயம் புதியதலைமுறை தொலைக்காட்சியில் தாமிரபரணி ஆறு எவ்வளவு மோசமாக மாசுபடுத்தப்படுகிறது, அவற்றில் பொதுமக்களின் அதீத பங்கு மற்றும் அரசு இயந்திரத்தின் அலட்சியம் குறித்த தகவல்கள் பரிமாறப்பட்டதை செவியுற்றபோது/கண்ணுற்றபோது வேதனையாக இருந்தது.
"மாசி" யை நாம் விரும்பலாம். ஆனால், பேராபத்துகள் தரும் "மாசு" வை விரும்புதல் கூடாவே கூடாது. மாசுகள் பல வகை, ஒவ்வொன்றும் ஒரு வகை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross