வி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்துப் போட்டிகள், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில், இம்மாதம் 02ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
ஜூன் 13ஆம் தேதியன்று (நாளை) நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில், காலரி பேர்ட்ஸ் அணியும், பி.ஜி.எஃப். யுனைட்டெட் அணியும் மோதவுள்ளன.
இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டிகளின் முடிவுகள் குறித்த விபரத்தை, சுற்றுப்போட்டிக் குழு பின்வருமாறு தெரிவித்துள்ளது:-
V-United Sports Club சார்பாக கடந்த 2-ம் தேதி முதல் 11 நாட்களாக நமதூர் ஐக்கிய விளையாட்டுச் சங்க மைதானத்தில் 5-வது ஆண்டு காயல் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வந்தது. இதின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் (13-06-2013) மாலை நடைபெற்றது. இதில் Gallery Birds அணியும், BGF United அணியும் விளையாடின.
இரண்டு அணிகளும் சம வலிமை வாய்ந்ததாக இருந்ததால், இப்போட்டியின் துவக்கம் முதலே பரபரப்பு காணப்பட்டது. BGF United அணியின் முன்கள வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும், பின்கள வீரர்கள் தடுப்பாட்டத்தில் செய்த தவறின் காரணமாக Gallery Birds அணியுன் வீரர் காழிஅலாவுத்தீன் நேர்த்தியாக ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் முதல்பாதி ஆட்டம் முடிவில் Gallery Birds அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
இரண்டாவது பாதி ஆட்டம் துவங்குவதற்கு முன்னர் இறுதிப் போட்டியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எல்.கே.மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜனாப். M.J.F.. செய்யது அஹமது அவர்களுக்கு இரண்டு அணி வீரர்களையும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் மேலும் பரபரப்பாக விளையாடிய BGF United அணி மேற்கொண்ட முயற்சிகளை Gallery Birds அணியின் பின்கள வீரர்கள் மிகவும் நேர்த்தியாக தடுத்தனர். அந்த அணியின் மூத்த வீரர் ராஜிக் ஹூஸைன் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். மீண்டும் Gallery Birds அணி வீரர் காழிஅலாவுத்தீனுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மேலும் ஒரு கோல் அடித்தார் இதன் மூலம் Gallery Birds அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று V-United 5-ம் ஆண்டு கோப்பையை தட்டிச் சென்றது.
இதன் பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நான்காம் இடம் பிடித்த அணிக்கு ஹாங்காங் V-United Forex நிறுவனத்தினர் வழங்கிய ரூபாய் 3000 பரிசினை Strange Spikers அணியின் உரிமையாளர் இப்றாஹீம் ஈர்ஸாத்திற்கு ஜமால் மாமா வழங்கனார்கள்.
மூன்றாம் இடம் பிடித்த PHM 7 Star அணியினருக்கு ரூபாய் 3000 பரிசினை அந்த அணியின் வீரர் பசீர் பெற்றுக் கொண்டார். அந்த பரிசினை ஜனாப். பசீர் (Vilaku Store) அவர்கள் வழங்கினார்கள். இந்த பரிசினை சென்னை V.M.S. Jewelers நிறுவனத்தினர் வழங்கினார்கள்.
இரண்டாம் இடத்தைப் பெற்ற BGF United அணிக்கு ரூபாய் 10000 மற்றும் கோப்பையையும் அந்த அணியின் உரிமையாளர் தமீம் மற்றும் ஆட்டவீரர்களுக்கு ஜமால் மாமா வழங்கினார்கள். இந்த பரிசினை ஹாங்காங் ALL COM Exchange நிறுவனத்தினர் வழங்கினார்கள்.
முதல் இடத்தை பெற்ற அணியான Gallery Birds அணியினருக்கு ரூபாய் 15 ஆயிரம் மற்றும் கோப்பையை அந்த அணியின் உரிமையாளர் கலாமீஸ் யாஸர் மற்றும் அணி வீரர்களிடம் இறுதிப் போட்டியின் சிறப்பு விருந்தினர் எல்.கே.மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜனாப். M.J.F. செய்யது அஹமது அவர்கள் வழங்கினார்கள்.
இந்த பரிசினை சென்னை தி.நகர் L.K.S.Gold House நிறுவனத்தினர்கள் வழங்கினார்கள். இந்த போட்டித் தொடரின் Best Defender , Best Goal Keeper, Best Midfield, Best Striker, Best Rising Star, Best Player மற்றும் Fair Play அணிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இறுதிப் போட்டியை காண வந்த ரசிகர்களில் 45 நபர்கள் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பரிசுகளை A.K.M. ஜூவல்லர்ஸ், L.T.S. ஜூவல்லர்ஸ், மாஷாஅல்லாஹ் தாவூத் ரியல் எஸ்டேட், WSAR SOLAR மற்றும் J.J. ஜூவல்லர்ஸ் ஆகிய நிறுவனத்தினர்கள் வழங்கினார்கள்.
இவ்வாறு, வி-யுனைட்டெட் கே.பி.எல். சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.ஜஹாங்கீர் |