காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரி நிர்வாகத்தால், பள்ளி செல்லும் மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வரும் தீனிய்யாத் (மார்க்க அடிப்படைக்) கல்வி நிறுவனம் “மக்தபத்துர் ராஸிய்யா”.
இங்கு பயிலும் நூற்றுக்கணக்கான மாணவர்களின் கல்வித் திறனை வளர்ப்பதற்காக ஆண்டுதோறும் திருமறை குர்ஆன் சிறு அத்தியாயங்கள் மனனம், பேச்சுப்போட்டி, துஆ - பிரார்த்தனை மனனப் போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், நடப்பாண்டின் போட்டிகள் இம்மாதம் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை, ஜாவியா வளாகத்தில் நடைபெறுகிறது. போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், 8 ஆண்டுகள் பாடத்திட்டத்தைக் கொண்ட தீனிய்யாத் கல்வியை முடித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கும் விழா, இம்மாதம் 23ஆம் தேதியன்று ஜாவியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சிகள் அனைத்தும், http://www.ustream.tv/channel/zaviakayal என்ற இணையதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்பட்டு வருகிறது. |