முதல்வர் ஜெயலலிதா தமிழக அமைச்சரவையில் - ஒன்பதாவது முறையாக - இன்று மாற்றம் செய்துள்ளார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லப்பாண்டியன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முஹம்மது ஜான் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க-வின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இன்று நியமனம் செய்யப்பட்ட ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் - சுற்றுலாத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரான அப்துல் ரஹீம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சில அமைச்சர்களின் பொறுப்புகளும் மாற்றி வழங்கப்பட்டுள்ளது.
வனத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமாலுக்கு - தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்து சமயம் மற்றும் அற நிலையத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு வனத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் பி.செந்தூர பாண்டியனுக்கு - இந்து சமயம் மற்றும் அற நிலையத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சர்கள் நாளை (ஜூன் 18) மாலை பதவி ஏற்கவுள்ளனர்.
Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 2:50 pm / 17.6.2013
6. எக்கணமும் எந்திரிக்க ஆயத்தமுடன் இருப்பவர்தான் அதிமுக மந்திரி! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (YANBU)[17 June 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28108
காலையில் எழுந்தவுடன் ஜன்னல் திரைச்சீலையை விலக்கிப்பார்த்து, நம்முடைய அரசாங்க காவலாளி கேட்டில் இருக்கிறாரா அல்லது தூக்கிவிட்டார்களா என்பது ஊர்கிதமான பிறகுதான் அவர் அன்றைய மந்திரியின் வேலையையே ஆரம்பிப்பாராம்! இது வடமாநிலத்தில் உள்ள ஒருமாநில மந்திரிகளின் நிலைஎன்றார்கள்!
இங்கு உள்ள அம்மாக்கள் ஆட்சியை நான்சொல்ல தேவையில்லை அது அப்பட்டமாக அனைவருக்கும் தெறிந்த தாரகை மந்திரம் "இன்று மந்திரி நாளை எந்திரி"
ஆடிய ஆட்டமென்ன, பேசிய வார்த்தையென்ன தேடிய செல்வ.......என்ற பாடல் எங்கேயே ஒலிக்கிறது!
7. Re:...அரசியல் கூத்து posted byvilack noor mohamed (dubai)[17 June 2013] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28109
இது எல்லாம் அரசியலில் சகஜம்பா!அதுவும் எங்க அம்மா அரசியலில் ரொம்ப சகஜம்பா!காலையில் அமைச்சர்கள் கண் விழித்தயுடன் வாசலில் செக்யூரிட்டி இருக்கிறதா என்பதை தினமும் பார்த்து விட்டு தான் பல் துலக்க செல்லவேண்டும்.
9. Re:... posted byHASBULLAH MACKIE (dubai)[17 June 2013] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28112
பாவம். இவர்கள் எல்லாம் அம்மாவின் காலை பிடிக்க தெரியாதவர்கள்... எங்கே பேசினாலும் அம்மாவை புகழ்ந்து பேசி விட்டால் தப்பித்தார்கள்.. அல்லது அவர்களுடைய சகாக்கள் காலையாவது பிடித்து விட வேண்டும்.. இல்லை என்றால் இதான் கதி...
10. கூடா நட்பு... இப்போது கேடாய் முடிந்தது...! posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[17 June 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28115
அ தி மு க வின் உண்மையான மூத்த உறுப்பினர்களின் சமீபத்திய நீ மோர் பந்தல் திறப்பு விழாவின் போது உரையாற்றிய ஆடியோ CD அம்மாவின் தனி அறைக்கு சென்று விட்டதோ என்னமோ...
உண்மையான அ தி மு க வின் மூத்த உறுப்பினர்களிடமும் - தொண்டர்களிடமும் அப்போது பொறுப்பிலிருந்த முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் அவர்கள் விலகியே இருந்தார்...! அதான் இந்த நிலைமை வேறு ஒன்றுமல்ல...!
கூடா நட்பு... இப்போது கேடாய் முடிந்தது...!
மொகைதீன் மாமாவுக்கு ஒரு குட் பை.... சாதிச்சிட்டரே இந்த மனுஷன் சமீபத்திய நீ மோர் பந்தல் திறப்பு விழா மூலமாக...!
மாவட்ட அளவில் கட்சியில் உண்மை விசுவாச உறுபினர்களை அ தி மு க வில் சேர்ப்பதை விட்டுவிட்டு காயல்பட்டினம் நகரமன்ற உறுபினர்களை (போலிகளை) சேர்த்ததின் விபரீதம் தான் இது...!
12. Re:... posted byM.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.)[17 June 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28120
நம்ம ஊரு அம்மையார் விஷயத்தில் அவர் நடந்து கொண்ட விதம், காக்கா(வை) பிடித்த காரணம், தான் அதிமுகவின் நிரந்தர அமைச்சர் என்கிற செறுக்கு, இப்படி பல வேண்டாத வேலைகளில் அண்ணாச்சி நின்னாச்சி இப்ப எல்லாம் மண்னாச்சி!
அம்மா என்ன கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்கும் முட்டாள் பூனையா? கெட்டிக்காரி! தம் கட்டுப்பாட்டில் ஒட்டுமொத்த கட்சிக்காரர்களையும் கட்டுக்குள் வைத்திருக்கும் திறமைசாலி!
மேடையில் அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த மந்திரி பதவிக்கு ஆப்பு வரும். மேடை ஏறும் போது மந்திரி இறங்கும் போது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். ஒவ்வொரு அமைச்சரும் உஷார இல்லாட்டி இப்படிதான் வரும் நம்ம அம்மையாரின் ஆப்பு!
யப்பு பொம்பளைங்கன்னா வெறும் பொக்கு கடலைன்னு நினச்சுடாதீங்க....
15. Re:... posted bynizam (india)[18 June 2013] IP: 101.*.*.* India | Comment Reference Number: 28126
நல்ல துடிப்பான அமைச்சர் நமதூர் வளர்ச்சி திட்டங்களுக்கு உருதினையாக நின்றார். ஒரு மனிதன் வீழ்ச்சி அடைந்தவுடன் ஏளனமாக பேசுவது நபி வழிக்கு அடையாளமாக இருக்காது.
ஒரு மனிதனின் வீழ்ச்சி எழுச்சி எல்லாம் படைத்த இறைவன்தான் முடிவு செய்கிறான். சரி கேட்கிறேன் இப்போது சண்முகநாதன் வந்துள்ளார். நிலைமை மாறபோகிறதா? இதே நிலைதான் தொடரபோகிறது.
என்னை பொறுத்த வரை இது காயல் சமபவங்களுக்கு காரணமாக நடந்தது அல்ல. இது நீண்ட காலமாக அனிதா vs சண்முகநாதன் பிறகு செள்ளப்ண்டியன் vs சண்முகநாதன் நடந்து வரும் பனிபோரின் விளைவாகவே கருதுகிறேன்.
யப்பா .....இதற்கெல்லாம் .....இப்படி ஒரு விமர்சனமா ??என்ன ?? நமது மாண்புமிகு தமிழக முதல்வர் ....அம்மா அவர்களின் .....ஆட்சியும் ,, சரி,,நடவடிக்கையும் சரி ,, அதிரடியாகவும் ...நல்ல முறையில் பொது மக்களுக்கு வேலை செய்ய கூடியவர்களாக உள்ளார்களா ....என்றும் ....நம் செல்வி அம்மா அவர்கள் எல்லா ..அமைச்சர்களையும் சரி ...M. L.A. களையும் சரி ரொம்பவும் கூர்ந்தே....கவனித்து வருவதே நாம் ...செல்வி அம்மா அவர்களின் இது போன்ற சுறு சுறுப்பான செயல் வடிவத்தில் நாம் பார்க்கலாம் .....அம்மாவின் செயல் நல்ல பாராட்ட கூடிய செயல் தான் ....
நமது மாவட்ட முன்னாள் அமைச்சர்.திரு. செல்லப்பாண்டியன் அவர்களை நாம் குறை சொல்ல முடியாது தான் ....பொதுவாக நம் மாவட்டத்துக்கு ஓரளவு நல்லது தான் செய்து இருப்பார்கள் என்பதே நம் பொது மக்களின் கருத்து ......
பொதுவாக தமிழக ....அனைத்து அமைச்சர்களும் சரி .....M.L.A. களும் சரி..... தமிழக முதல்வர்.செல்வி அம்மா கண்பார்வையில் இருந்து தப்புவது கடினமே ....ஆதலால் தயவு செய்து நீங்கள் ( அமைச்சர்களும் சரி .....M.L.A. களும் சரி ) ரொம்பவும் கவனமாக இருந்து தங்களையே முழுமையாக நம்பி உள்ள தொகுதி மக்களை ஏமாற்றி விடாதீர்கள் .....
தங்கள் தொகுதி மக்களுக்கு நல்லதே செய்யுங்கள் .....நம் செல்வி அம்மா அவர்களின் முழு நம்பிக்கைக்கு பாத்திரமாக இருங்கள் ....செயல் படுங்கள்...... நல்லதே நினையுங்கள் ....நல்லதே நடக்கும் .....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross