| 
 அஇஅதிமுக கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளராகவும், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும் இருந்து வந்த சி.த.செல்லப்பாண்டியன் அப்பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும், புதிய மாவட்டச் செயலாளராகவும் - அமைச்சராகவும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று அறிவிப்புகள் வெளியாயின. 
  
கட்சிக்கு புதிய மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட்டதை வரவேற்று, இன்று மாலையில் காயல்பட்டினம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில், நகர அதிமுகவினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய காட்சிகள் வருமாறு:- 
  
 
  
 
  
தகவல் & படங்கள்:  
ஹிஜாஸ் மைந்தன் 
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்  |