கரூர் நகரில், மாணிக்கக் கல் விற்பனைக் கண்காட்சி, இம்மாதம் 15ஆம் தேதி சனிக்கிழமையன்று நடைபெற்றது.
இக்கண்காட்சியில், தாய்லாந்து நாட்டின் மாணிக்க வணிகர்கள் கலந்துகொண்டு, கரூர் - காங்கேயம் பகுதிகளில் பரவலாகக் கிடைக்கும் மூன் ஸ்டோன், அக்வா மெரைன் உள்ளிட்ட வகைக் கற்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.
காங்கேயம் - கரூர் நகரங்களில் மாணிக்க வணிகம் செய்து வரும் காயலர்கள் பலரும் இம்முகாமில் கலந்துகொண்டனர். சிறந்த மாணிக்க விற்பனையாளர்களுக்கு கண்காட்சியின்போது விருதுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கண்காட்சியில் கண்ட காட்சிகள்:-
தகவல் & படங்கள்:
M.A.முஹம்மத் தம்பி
தைக்கா தெரு - காயல்பட்டினம்
[செய்தி திருத்தப்பட்டது @ 11:13 / 19.06.2013] |