காயல்பட்டினம் கோமான் ஜமாஅத் இளைஞர்களால் நடத்தப்பட்டு வரும் நியூ கோமான் நற்பணி மன்றம் சார்பில், வழமை போல இவ்வாண்டும் - நகரின் ப்ளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு சாதனை மாணவ-மாணவியர் மற்றும் கோமான் ஜமாஅத் அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியர், ஆலிம் - ஆலிமா, ஹாஃபிழ் - ஹாஃபிழா ஆகியோரைப் பாராட்டி பரிசுகள் வழங்கும் விழா இம்மாதம் 16ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 06.30 மணியளவில், கோமான் நடுத்தெருவில் நடைபெற்றது.
மாணவர் ஃபவ்ஸான் கிராஅத் ஓதி விழா நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து, மன்ற உறுப்பினர் ஹாஜி மலங் வரவேற்புரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, விழாவிற்குத் தலைமை தாங்கிய காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர், காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், அருணாச்சலபுரம் தேசிய தொடக்கப்பள்ளியின் பணி நிறைவுபெற்ற தலைமையாசிரியர் எஸ்.சுந்தர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர், மேடையில் வீற்றிருந்த அனைவரையும் கண்ணியப்படுத்தும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, நடைபெற்று முடிந்த ப்ளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில், காயல்பட்டினம் நகரளவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற பி.எம்.சாமு ஸமீரா, சுப்பையா என்ற கண்ணன் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அடுத்து, எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வில் நகரளவில் முதல் இரண்டிடங்களைப் பெற்ற எம்.ஒய்.தவ்லத் ரிஸ்வானா, எஸ்.லக்ஷ்மி நாராயணன் ஆகிய ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னர், ப்ளஸ் 2 தேர்வில் கோமான் ஜமாஅத் அளவில்
முதலிடம் பெற்ற - நெய்னா முஹம்மத் என்பவரின் மகள் என்.மொகுதூம் நளீஃபா,
இரண்டாமிடம் பெற்ற - அப்துஸ் ஸலாம் என்பவரின் மகள் ஏ.எஸ்.சுபைதா பேகம்,
மூன்றாமிடம் பெற்ற - ஷேக் முஹ்யித்தீன் என்பவரின் மகன் எஸ்.முஹம்மத் அஸ்கர்
ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கோமான் ஜமாஅத் அளவில்
முதலிடம் பெற்ற - பத்ருத்தீன் என்பவரின் மகள் பி.யூஸுஃப் நிஸா,
இரண்டாமிடம் பெற்ற - முஹம்மத் ஸலீம் என்பவரின் மகன் முஹம்மத் ஃபாரூக் அஃலம்,
மூன்றாமிடம் பெற்ற முஹம்மத் முஹ்யித்தீன் என்பவரின் மகன் எம்.எம்.மொகுதூம் முஹம்மத்
ஆகிய மாணவ-மாணவியருககு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, ஆலிமா பட்டம் பெற்ற - கோமான் ஜமாஅத்தைச் சேர்ந்த,
மொகுதூம் அலாவுத்தீன் என்பவரின் மகள் எம்.ஏ.ஸப்ரன் ஜமீலா, பி.எம்.முஹம்மத் ஹனீஃபா என்பவரின் மகள் எம்.எச்.செய்யித் அஹ்மத் ஃபாத்திமா ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
பரிசுகளனைத்தையும், விழா தலைவரும் - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா ஷேக், எல்.கே.மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், அருணாச்சலபுரம் தேசிய தொடக்கப்பள்ளியின் பணி நிறைவுபெற்ற தலைமையாசிரியர் எஸ்.சுந்தர் ஆகியோர் தம் கைகளால் வழங்கினர். பரிசுக்குரிய மாணவ-மாணவியரும், நேரடியாக வந்து பெற்றுக்கொள்ள இயலாமல் போனவர்களுக்கு அவர்கள் சார்பில் பிரதிநிதிகளும் வந்து பரிசுகளைப் பெற்றுச் சென்றனர்.
பரிசளிப்பின் நிறைவில், நகரளவில் முதலிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தன் சார்பில், இந்திய முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் எழுதிய “அக்னி சிறகுகள்” என்ற நூலை அன்பளிப்பாக வழங்கினார்.
முன்னதாக, நியூ கோமான் நற்பணி மன்ற தலைவர் ஹாஜி என்.எம்.முஹம்மத் இப்றாஹீம், உறுப்பினர் கோமான் காஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோமான் நற்பணி மன்ற உறுப்பினர் ஆசிரியர் மு.அப்துல் ரசாக் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
மன்ற உறுப்பினர் ஜெ.ஏ.முஹம்மத் ராஸிக் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்விழாவில், கோமான் ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்களும், நகரின் இதர பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.
கள உதவி:
‘வீனஸ்’ மணி |