மழை நீரை சேகரிப்பதன் பயன்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நோக்குடன், காயல்பட்டினம் நகராட்சியின் சார்பில், இன்று மாலை 04.00 மணியளவில் மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் பச்சைக் கொடியசைத்து, பேரணியைத் துவக்கி வைத்தார்.
நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமார், நகராட்சி பொறியாளர் சிவக்குமார், நகராட்சி சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், பணி மேற்பார்வையாளர் செல்வமணி, அலுவலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்ற இப்பேரணியில், மழை நீர் சேகரிப்பின் பலன்கள் குறித்த பதாகைகளைத் தாங்கியவர்களாக, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியின் மாணவர்கள் நகர வீதிகளில் பேரணியாகச் சென்றனர். மாணவர்களை, அப்பள்ளியின் ஆசிரியர்களான ஏ.பீர் முஹம்மத் ஹுஸைன், ஏ.டிக்ஸன் ஃபெர்ணான்டோ, எஸ்.ஜெ.செய்யித் அய்யூப் அலீ, என்.ரஃபீக் அஹ்மத் ஆகியோர் வழிநடத்தினர்.
பேரணியின்போது, நகராட்சியின் சார்பில் மழை நீர் சேகரிப்பு குறித்த வாசகங்களடங்கிய விழிப்புணர்வுப் பிரசுரமும் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்பட்டது. நகர்மன்றத் தலைவர் மற்றும் அலுவலர்களும், பள்ளி மாணவர்களும் அவற்றை பொதுமக்களுக்கு வினியோகித்தனர்.
முன்னதாக, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 11ஆவது வார்டு உறுப்பினரும், நகர்மன்றத் துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன், 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.சாமு ஷிஹாபுத்தீன் ஆகியோர் பேரணி ஏற்பாடுகளைப் பார்த்துச் சென்றனர்.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம்
[செய்தியில் கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டது @ 8:20 / 21.06.2013] |