செய்தி எண் (ID #) 11073 | | |
வியாழன், ஜுன் 20, 2013 |
ஹாமிதிய்யா, முஅஸ்கர் பேராசிரியரின் தந்தை காலமானார்! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 3475 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (29) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் மற்றும் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி ஆகியவற்றின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீயின் தந்தை ஹாஜி எஸ்.எல்.அஹ்மத் ஆலிம், இன்று மாலை 06.10 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 88.
அன்னார், மர்ஹூம் சுல்தான் லெப்பை ஆலிமின் மகனும்,
மர்ஹூம் அல்லாமா அல்ஹாஜ்ஜுல் ஹரமைன் நஹ்வீ முஹம்மத் இஸ்மாஈல் ஆலிம் முஃப்தீ அவர்களின் மருமகனும்,
மர்ஹூம் எஸ்.எல்.மஹ்மூத் அவர்களின் சகோதரரும்,
ஹாஜ்ஜா நஹ்வீ எம்.ஐ.புகாரீ ஜெய்னப் என்பவரின் கணவரும்,
காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம் மற்றும் முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி ஆகியவற்றின் பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீயின் (கைபேசி எண்: +91 99423 05955) தந்தையும்,
சிங்கப்பூர் காயல் நல மன்றத் தலைவர் எம்.அஹ்மத் ஃபுஆத் (கைபேசி எண்: +65 91790846) உடைய சிறிய தந்தையும்,
எம்.ஃபாத்திமா என்பவரின் மாமனாரும்,
ஹாஃபிழா எஸ்.ஏ.சி.ஹலீமத் ரஹ்மா முஅஸ்கரிய்யா, எஸ்.ஏ.சி.அஹ்மத் ஸஈத், ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோரின் பாட்டனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை (ஜூன் 21 வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணியளவில் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 22:24 / 20.06.2013] |