நடப்பாண்டு 10ஆம், 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வெழுதிய - காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹாஃபிழ் மாணவ-மாணவியர், பரிசளிப்புக்காக தமது மதிப்பெண் விபரங்களை, இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு, இக்ராஃ கல்விச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து, இக்ராஃ சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 29.06.2013 அன்று நடத்தப்படவுள்ள “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2013” நிகழ்ச்சியின்போது, 10ஆம் - 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில், திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்த ஹாஃபிழ் மாணவர்களுள், முதல் மூன்றிடங்களைப் பெற்ற காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவ-மாணவியருக்கும் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
எனவே, இவ்வாண்டு 10ஆம், 12ஆம் வகுப்பு தேர்வெழுதிய ஹாஃபிழ் மாணவ-மாணவியர், தங்களது பெயர் / வீட்டு முகவரி, தொடர்பு எண், மதிப்பெண் உள்ளிட்ட விபரங்களை, காயல்பட்டினம் கீழ நெய்னா தெருவில் (கலீஃபா அப்பா தைக்கா எதிரில்) அமைந்துள்ள - இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்தில் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இச்செய்தியைப் பார்க்கும் மற்றவர்கள், நடப்பாண்டு 10ஆம், 12ஆம் வகுப்பு தேர்வெழுதிய - தங்களுக்கறிமுகமான ஹாஃபிழ் மாணவர்களுக்கு இதுகுறித்து எடுத்துக்கூறி, அவர்களது மதிப்பெண் விபரங்களைப் பதிவு செய்யக் கூறுமாறும் இக்ராஃ நிர்வாகம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.S.E.மஹ்மூது
மக்கள் தொடர்பாளர்
இக்ராஃ கல்விச் சங்கம்
காயல்பட்டினம் |