ஜூலை 27 அன்று நடைபெறவுள்ள ராஜ்யசபா உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பு வருமாறு:
24.7.2013 அன்று பதவிக் காலம் முடிவுற்று ஓய்வு பெறும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் இடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலில், 8 செல்லத்தக்க வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வேட்பு மனுவை திரும்பப் பெற கடைசி நாள் இன்று (20.6.2013) பிற்பகல் 3.00 மணிவரை ஆகும். திரு. கு. தங்கமுத்து (அஇஅதிமுக உறுப்பினர்) தனது வேட்பு மனுவை 18.6.2013 அன்று திரும்பப் பெற்றுக்கொண்டார். கீழ்க்கண்ட 7 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர்:
ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க, சென்னை-9, தலைமைச் செயலக, பிரதான கட்டிடத்தின், தரை தளத்தில் அமைந்துள்ள சட்டமன்றக் குழுக்கள் கூடும் அறையில் 27.6.2013 (வியாழக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்றையதினம் மாலை 5.00 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
அ.மு.பி. ஜமாலுதீன்,
தேர்தல் நடத்தும் அதிகாரி
மற்றும் செயலாளர்,
சட்டமன்றப் பேரவைச் செயலகம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-9. |