காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து தேர்வெழுதிய எஸ்.ரத்னசூர்யா என்ற மாணவி, உணவு மேலாண்மை மற்றும் குழந்தை வளர்ப்பு பாடத்தில், 200க்கு 173 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றார்.
தற்போது இம்மாணவி - டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி வகுப்பில் பயில திட்டமிட்டுள்ளார். இதற்கான கட்டணமான ரூபாய் 26,000 செலுத்த போதிய வருமானம் இல்லாத காரணத்தால், காயல் நல மன்றங்கள், சமூக ஆர்வலர்களின் உதவியை இவர் கோரியிருந்தார். இது குறித்த செய்தி காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இதனை தொடர்ந்து - இரு தனவந்தர்கள் தலா 2000 ரூபாயும், ஒரு தனவந்தர் 5000 ரூபாயும் என மாணவியை நேரடியாக தொடர்புகொண்டு 9,000 ரூபாய் வரை உதவி வழங்கியிருந்தனர்.
கல்விக்கட்டணம் 26,000 ரூபாய் என்பதால், இன்னும் 17,000 ரூபாய் தேவையுள்ளது என்ற செய்தி நேற்று (ஜூன் 22) இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து - அமெரிக்கா வாழ் காயலர் ஒருவர் எஞ்சிய தொகையான 17,000 ரூபாயினை வழங்கி - மாணவிக்கு தேவையான 26,000 ரூபாயை பூர்த்தி செய்துள்ளார்.
கட்டணத்தை செலுத்த இறுதி நாள் பூர்த்தியாகியிருந்தாலும், கல்லூரி நிர்வாகம் கட்டணத்தை செலுத்த ஜூன் 24 (திங்கள்) வரை மாணவிக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இம்மாணவியின் தொடர்பு விபரம்:
சு.ரத்தினசூரியா,
96 C, உச்சினி மாகாளி அம்மன் கோவில் தெரு,
காயல்பட்டினம்.
தொலைப்பேசி எண்: 80151 20863
|