துபாய் காயல் நல மன்றத்தின் ஜூன் மாத செயற்க்குழு கூட்டம் ஜூன் மாதம் 14 ம் தேதியன்று நடைபெற்றது. இது குறித்து அம்மன்றத்தின் துணைத்தலைவர் சாளை ஷேக் ஸலீம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
துபாய் காயல் நல மன்றத்தின் ஜூன் மாத செயற்க்குழு கூட்டம் இறையருளால் ஜூன் மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மன்றத்தின் தலைவர் புஹாரி அவர்கள் இல்லத்தில் வைத்து நடைபெற்றது. கூட்ட நிகழ்வுகள் பின்வருமாறு:
கூட்டத்திற்கு மன்றத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான T.A S. மீரா சாஹிப் தலைமை தாங்கி M.S. நூஹு சாஹிப் கிராஅத் ஓத கூட்டம் ஆரம்பித்தது.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் / எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருவன:
1. நமது மன்றத்தின் மூத்த உறுப்பினர் ஜனாப் V S A தாவூத் ஹாஜி அவர்களின் மச்சான் சாஹிப் தம்பி அவர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மர்ஹூம் அவர்களின் ம'அ ஃபிரத்திற்காக பிரார்த்திக்கப்பட்டது.
2. இக்ராஃ கல்விச்சங்கதின் புதிய தலைவர் குளம் அஹமது மொஹிதீன் அவர்களுக்கு மன்றத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது - மன்றத்தின் சார்பில் ஒரு வாழ்த்து மடலும் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
3. குர்ஆன் மனனம் செயத +2 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணாக்கர்களின் கல்வி பரிசு தொகைகளையும் சந்தியுங்கள் மாநிலத்தின் முதல் மாணவரை நிகழ்ச்சிக்கு மன்றத்தின் அனுசரணை தொகையையும் முறையே இக்ராஃவிற்கு அனுப்ப ஒப்புதல்.
4. மருத்துவ உதவிக்கு மைக்ரோ காயல் அமைப்பை தொடர்ந்து உபயோகப்படுத்தவும் அதன் அடிப்படையில் ஷிபா என்ற ஒருங்கிணைந்த மருத்துவ உதவிக்குழுமம் உருவாவதை ஆதரிப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
பல பொதுவான ஊர் நலத் திட்டங்களும் விவாதிக்கப்பட்டன. துஆவுடன் தேநீர் விருந்திற்குப்பின் கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்: சாளை ஷேக் ஸலீம்,
துணை தலைவர், துபாய் காயல் நல மன்றம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross