காயல்பட்டினத்தில் நடப்பு ஜூன் மாத துவக்கத்திலிருந்தே அவ்வப்போது சாரல் மழை பெய்தவண்ணம் உள்ளது.
குற்றாலத்தில் சீசன் உள்ள நாட்களிலெல்லாம், நெல்லை மாவட்டம் முழுக்கவும், காயல்பட்டினம் சுற்றுவட்டாரம் உள்ளிட்ட - தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகளிலும் சாரல் மழை பெய்வது வாடிக்கை. அந்த அடிப்படையில், நாள்தோறும் காலை - மாலை - இரவு நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.
இன்று அதிகாலையில் துவங்கி, காலை 08.00 மணி வரை சாரல் மழை பெய்தது. வானம் இருண்டும், வானிலை மிதமான சூழலிலும் காணப்பட்டது. நண்பகல் 11.30 மணிக்கு மேல் ஓரளவுக்கு வெயில் வீசத் துவங்கியது. எனினும், அவ்வப்போது சாரல் மழை நகரில் எட்டிப் பார்த்துச் செல்கிறது.
குற்றால சீசன் களைகட்டியுள்ள நிலையில், சில வாரங்களில் ரமழான் - நோன்பு மாதமும் அண்மிப்பதைக் கருத்திற்கொண்டு, காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சாரி சாரியாக குற்றாலத்தை நோக்கிப் படையெடுத்தவண்ணம் உள்ளனர்.
நேற்று (ஜூன் 23ஆம் தேதி) குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் அளவுக்கதிகமாக தண்ணீர் விழுந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவ்வருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறிருக்க, நகரின் தற்போதைய வானிலைச் சூழல், எஞ்சிய பொதுமக்களையும் குற்றாலத்தை நோக்கி ஈர்த்து வருகிறது.
நன்றி (படங்கள்):
தினமணி நாளிதழ் |