ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் (RKWA) 37ஆவது செயற்குழுக் கூட்டம், 14.06.2013 வெள்ளிகிழமை அன்று நடைபெற்றது. இது குறித்து அம்மன்றம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் (RKWA) 37ஆவது செயற்குழுக் கூட்டம், 14.06.2013 வெள்ளிகிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின், எமது மன்றத்தின் துணைத்தலைவர் A.H. முஹம்மது நூஹ் அவர்கள் இல்லத்தில், எமது மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் S.L.சதக்கத்துல்லாஹ் அவர்கள் தலைமை உரையாற்றி துவக்கி வைத்தார்.
ஹாஜியார் சாலிஹ் அவர்கள் இறைமறை ஓதி துவங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக பொதுக்குழு உறுப்பினர்கள் சகோதர்கள் புகாரி, M.M.செய்யது இப்ராஹிம் மற்றும் லால்பேட்டை முஹம்மது நாஸர் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
எமது மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் M.E.L.நுஸ்கி அனைவரையும் வரவேற்றார். நிதிநிலை அறிக்கையை மன்ற பொருளாளர் A.T. சூஃபி இபுறாஹீம் அவர்கள் தாக்கல் செய்தார்.
நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு:
பின்னர், நமதூர் வறிய மக்களிடம் இருந்து வந்த கடிதங்கள் வாசிக்கப்பட்டு பத்து நபர்களின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1,44,500யும், கல்விக்காக ரூ.35,000யும் சிறுதொழிலுக்காக ரூ.10,000 மேலும், மின்னஞ்சல் மூலம் May-ல் இலவச பள்ளிச் சீருடைக்காக ரூ.25,000 மொத்தம் ரூ.2,14,500/= ஒதுக்கீடு செய்யப்பட்டது.அல்லாஹ்வுக்கே எல்லாப்புகளும் புகழும்.
இக்ராவின் ஆயுள்கால மற்றும் வருடாந்திர உறுப்பினர் விளக்கம்:
ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் (RKWA) உறுப்பினர்கள் அனைவரும் தங்களை இக்ராவின் உறுப்பினர்களாக இனைத்துக்கொள்ள மன்ற செயற்குழு உறுப்பினர் உமர் பாரூக் பாஸீ அவர்களை (0535172003) தொடர்பு கொள்ளும்படியும் தற்போதைய ஆயுள்கால மற்றும் வருடாந்திர உறுப்பினர்கள் நிலை பற்றியும் விரிவாக விளக்கப்பட்டது.
தகுதி மதிப்பெண் (கட்-ஆஃப்):
தகுதி மதிப்பெண் (கட்-ஆஃப்) கூடுதலாகப் பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசு வழங்குவது குறித்து செயற்குழு உறுப்பினர் S.A.சித்தீக் விளக்கினார். இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பாக நடக்க இருக்கும் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை - 2013” நிகழ்ச்சியின் போது பரிசுகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், இக்ராஃவுக்கான (RKWA)-வின் பிரதிநிதி செயற்குழு உறுப்பினர் V.M.A.மொஹ்தூம் அமீன் அவர்கள் இது தொடர்பாக தான் இக்ராவுடன் மேற்கொண்ட தகவல் பரிமாற்றங்களையும் விளக்கினார்.
வாழ்த்துக்கள்:
இவ்வாண்டு நடந்து முடிந்த CBSE தேர்வில் ரியாத் அல்-யாஸ்மின் இன்டர்நேஷனல் பள்ளியில் பயின்ற எமது மன்றத் துணைச் செயலாளர் மொஹியத்தீன் சதக்கதுல்லாஹ் அவர்களின் மகன் ஹாஃபிழ் அப்துர்ரஹ்மான் அவர்கள் பத்துக்கு பத்து புள்ளிகள் (CGPA = 10) பெற்று A1 தகுதியில் தேர்ச்சி பெற்றமைக்கு, இம்மன்ற உறுப்பினர்கள் வாழ்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
ரமழான் உணவுத் திட்டம்:
ரமழான் உணவு திட்டத்திற்கான உணவுப் பொருட்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தேர்வு பற்றி பொருளாளர் A.T. சூஃபி இபுறாஹீம் மற்றும் உதவி பொருளாளர் Y.A.S. ஹபீப் முஹம்மது முஹ்ஸின் ஆகியோர் விளக்க, செயற்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது.
அடுத்த பொதுக்குழு மற்றும் ஒரு நாள் சம்பளத் திட்டம்:
எமது மன்றத்தின் 46-வது பொது குழு கூட்டம் எதிர் வரும் 19.07.2013 வெள்ளிகிழமை மாலை 5 மணியளவில் இஃப்தார் நிகழ்ச்சியுடன் நடைபெற இருக்கிறது.இப்பொதுக் குழுவின் போது மன்ற நலம் விரும்பிகள் தங்களின் வருடத்தில் ஒரு நாள் சம்பளத்தை தாங்கள் விரும்பினால் நன்கொடையாக கொடுக்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுளது. விருப்பம் உள்ளவர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை பொதுக்குழுவில் வைக்கப்பட்டிருக்கும் வெள்ளை கவரில் வைத்து உண்டியலில் போடவும். மன்றத்தின் உறுப்பினர்கள், மற்றும் காயல் அன்பர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறது.
’ஷிஃபா’:
‘ஷிஃபா’வின் துவக்க நிலைப் பற்றியும் தான் கலந்துக் கொண்ட கூட்டங்களின் விளைவுகள் பற்றியும் மன்றத் துணைத்தலைவர் A.H. முஹம்மது நூஹ் அவர்கள் சுருக்கமாக விவரித்தார்.
நன்றி உரை:
நன்றி உரை நயீமுல்லாஹ் அவர்களால் நிகழ்த்தப்பட்டு, இறுதியாக துணைத்தலைவர் ஹாஃபிழ் தாவூது இத்ரீஸ் அவர்கள் துஆ ஓதி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓத, கூட்டம் நிறைவுபெற்றது.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
நோனா M. செய்யது இஸ்மாயில்,
ஹாபிழ்.S.A.C. அஹ்மது ஸாலிஹ்,
ஊடகக் குழு, ரியாத் காயல் நல மன்றம்,
ரியாத் - சஊதி அரபிய்யா.
|