காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியிலிருந்து தேர்வெழுதிய எஸ்.ரத்னசூர்யா என்ற மாணவி, உணவு மேலாண்மை மற்றும் குழந்தை வளர்ப்பு பாடத்தில், 200க்கு 173 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றார்.
தற்போது இம்மாணவி - டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி வகுப்பில் பயில திட்டமிட்டுள்ளார். இதற்கான கட்டணமான ரூபாய் 26,000 செலுத்த போதிய வருமானம் இல்லாத காரணத்தால், காயல் நல மன்றங்கள், சமூக ஆர்வலர்களின் உதவியை இவர் கோரியுள்ளார்.
இது குறித்த செய்தி காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து தனவந்தர்கள் சிலர் மாணவியை நேரடியாக தொடர்புகொண்டு 9,000 ரூபாய் வரை வழங்கியுள்ளனர். இருப்பினும் இம்மாணவி மேற்கல்வி தொடர மேலும் 17,000 ரூபாய் தேவைப்படுகிறது.
கட்டணத்தை செலுத்த இறுதி நாள் பூர்த்தியாகியிருந்தாலும், கல்லூரி நிர்வாகம் கட்டணத்தை செலுத்த ஜூன் 24 (திங்கள்) வரை கால அவகாசம் வழங்கியுள்ளது.
இம்மாணவியின் தொடர்பு விபரம்:
சு.ரத்தினசூரியா,
96 C, உச்சினி மாகாளி அம்மன் கோவில் தெரு,
காயல்பட்டினம்.
தொலைப்பேசி எண்: 80151 20863
|