காயல்பட்டினம் அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் வெள்ளிவிழா - நிறைவு நிகழ்ச்சிகள் சமீபத்தில் நடைபெற்றன. இது குறித்து அம்மன்றம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
அல்-அமீன் இளைஞர் நற்பணி மன்றத்தின் வெள்ளிவிழா நிகழ்வுகள் 1.06.13 சனி அன்று துவங்கின. காலை 11 மணிக்கு நடைபெற்ற கருத்தரங்கில் 183 பெண்கள் கலந்துகொண்டனர். இதில் தாய்பாலின் சிறப்பு, கம்மா வழி கை வைத்தியம், இஸ்லாம் கூறும் ஒழுக்கவியல் அகிய தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பார்வையாளர்களில் குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்பட்டவருக்கு NOOR CONSTRUCTION CARE நிறுவனத்தின் சார்பாக தங்க நாணயம் பரிசாக வழக்கப்பட்டது. மேலும் 10 நபர்களுக்கு எமது மன்றத்தின் துணை செயலர் தீன் முஹம்மது முஹியித்தீன் சார்பாக ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
மாலை 4.30 தஹ்வித்துல் குர்ஆன் போட்டி - ஹாபிழ் மற்றும் மக்தப் மாணவர்கள் என இரண்டு பிரிவாக நடைபெற்றது. இதில் 32 மாணவர்கள் கலந்து கொண்டனர். இரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு சிறப்புப்பரிசுகள் வழங்கப்பட்டு, கலந்து
கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான பரிசுகள் விரைவில் தொடங்கப்படவுள்ள N.S.E. பார்மஸியின் உரிமையாளர் ஹாஜி N.S.E. மஹ்மூது அவர்கள் அனுசரனையில் வழங்கப்பட்டது.
2.06.13 அன்று காலை 5.30 மணிக்கு சங்க முன்னோடிகளின் பெயரில் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டது. காலை 10.00 மணிக்கு மௌலிது மஜ்லிஸ் நடைபெற்றது. பின்னர் மாலை 5 மணிக்கு சமுதாய சேவையும் சன்மார்க்க நெறியே என்ற தலைப்பில் மஹ்லாரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் காஜா முஹியித்தீன் ஆலிம் அவர்களால் மார்க்க செற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.
பின்னர் இரவு 8.00 மணிக்கு பட்டிமன்ற புகழ் S.சபரிநாத் M.E, M.A., M.Sc (PSY),MBA அவர்கள் தலைமையில் சுகாதார கேட்டிக்கு பெரிதும் துணை நிற்பது சுற்று சூழாலா? அல்லது சுயநடவடிக்கையா என்னும் தலைப்பில் நகைச்சுவைப் பட்டிமன்றம் நடைபெற்றது.
இரவு 9.30 மணிக்கு வெள்ளிவிழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பொது சேவையில் சாதனை புரிந்தவர்களுக்கு எம்மன்றத்தின் தலைவர் ஹாஜி S.I. அப்துல்காதர் அவர்களின் அனுசரனையில் சேவைச்செம்மல் விருதுகள் வழங்கப்பட்டது. இறுதியாக பாத்திஹா, துவாவுடன் நிகழ்ச்சிகள் யாவும் இனிதே நிறைவுற்றது, அல்-ஹம்துலில்லாஹ்.
குறிப்பாக இவ்விழாவிற்கான மேடை அமைப்பு போக்குவரத்திற்கு இடையூறின்றி அமைக்கப்பட்டிருந்தது. விழாக்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் குளம் ஜமால் முஹம்மது அவர்கள் தலைமையில் மன்ற செயலர் முஹம்மது முஹியித்தீன், துணை செயலர்கள் தீன் (முஹம்மது முஹியத்தீன்) அவர்கள், வாவு K.A. சாகுல்ஹமீது அவர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|