காயல்பட்டினம் ரிபோக் ஜாலி கால்பந்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும், காயல்பட்டினம் நகரளவிலான கால்பந்து சுற்றுப்போட்டி, ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடத்தப்படுவது வழமை.
18ஆம் ஆண்டு சுற்றுப்போட்டிகள், இம்மாதம் 15ஆம் தேதி துவங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஜூன் 19 புதன்கிழமையன்று (நேற்று) நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில், பி.எச்.எம். அணியும், ரிபோக் ஜாலி அணியும் மோதின. இதில், பி.எச்.எம். அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
ஜூன் 20 வியாழக்கிழமையன்று (இன்று) மாலையில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், காலரி பேர்ட்ஸ் அணியும், எல்.கே.மேனிலைப்பள்ளி அணியும் மோதின. இதில், எல்.கே.மேனிலைப்பள்ளி அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.
நாளை மாலையில் நடைபெறும் இறுதிப்போட்டியில், இன்று வெற்றிபெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளி அணியும், நேற்று வெற்றிபெற்ற பி.எச்.எம். அணியும் மோதவுள்ளன.
போட்டி நிறைவடைந்ததும், பரிசளிப்பு விழா நடைபெறவுள்ளது. அதில், இச்சுற்றுப்போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. அத்துடன், அண்மையில் மாநில அளவில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கும் – பள்ளிகளுக்கிடையிலான கால்பந்துப் போட்டியில் வெற்றிபெற்ற எல்.கே.மேனிலைப்பள்ளி அணிக்கு, ரிபோக் ஜாலி சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் சிறப்புப் பரிசும் வழங்கப்படவுள்ளது.
தகவல்:
A.M.T.ரியாஸ்தீன்
தலைவர் & சுற்றுப்போட்டி ஒருங்கிணைப்பாளர்
ரிபோக் ஜாலி கால்பந்துக் கழகம் |