குடியிருப்போர் அடையாள அட்டைக்கான விபரப் பதிவுகளுக்காக, கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற கணக்கெடுப்பின்போது - கணக்கெடுப்பாளர்களால் ஒப்புகைச் சீட்டு ஒன்று வழங்கப்பட்டது. அந்த ஒப்புகைச் சீட்டிலுள்ள விபரப்படியே தற்போது விபரங்கள் பதிவு செய்யப்படுவதால், அதைக் கொண்டு செல்வது அவசியமாகிறது.
2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, கணக்கெடுப்பாளர்களால் தரப்பட்ட ஒப்புகைச் சீட்டைத் தவறவிட்ட – 13ஆவது வார்டைச் சேர்ந்த பொதுமக்கள், தன்னிடம் அதன் நகலைப் பெறலாம் என, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் அறிவித்துள்ளார். |