பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிசுகள் வழங்கினார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பு வருமாறு:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று (19.6.2013) தலைமைச் செயலகத்தில், 2012-2013ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு, 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவிகளுக்கும் ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி வாழ்த்தினார்கள்.
தமிழகத்தில் அனைத்து மாணவ மாணவியருக்கும் தரமான கல்வியை வழங்கிடவும், அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதை ஊக்குவிக்கும் வகையிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு கட்டணமில்லா கல்வி, சத்துணவு, பேருந்து பயண அட்டைகள், மிதி வண்டிகள், சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மடிக்கணினி, கல்வி உபகரண பொருட்கள், காலணிகள், இடைநிற்றலைக் குறைக்க ஊக்கத் தொகைகள் போன்ற எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
2012-2013ஆம் கல்வியாண்டில் தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற மாணவர்கள் எஸ். ஜெயசூர்யா மற்றும் எஸ். அபினேஷ் ஆகியோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, இரண்டாம் இடம் பெற்ற மாணவர் எஸ். பழனிராஜ் மற்றும் மாணவி ஆர். அகல்யா ஆகியோருக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, மூன்றாமிடம் பெற்ற என்.ஜி. ராஜேஸ்வரி, இ. கலைவாணி, வி. விஷ்ணுவர்தன், ஏ.கே. கண்மணி, யு. மனோதினி, கே. ரவீணா, ஏ.எஸ். நிவேதிதா, பூஜா எஸ். குமார், எஸ். முத்து மணிகண்டன் ஆகிய 9 மாணவ மாணவிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, என மொத்தம் 13 மாணவ மாணவிகளுக்கு 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசுகள்;
10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்ற எஸ். அனுசுயா, ஜெ.பி.எம். தீப்தி, எம். காயத்திரி, டி. மார்சியாஷெரின், கே.ஆர். பொன்சிவசங்கரி, சி.எஸ். சாருமதி, பி. சோனியா, ஆர். ஸ்ரீதுர்கா, எஸ். வினுஷா ஆகிய 9 மாணவிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு, என மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசுகள் ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கிப் பாராட்டியதுடன், பரிசு பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களின் உயர்கல்விக்கான செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும் என்பதற்கான சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் மாநில அளவில் 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், 10-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் முதல் இடத்தினைப் பெற்ற மாணவிகளுக்கும் ரொக்கப் பரிசுகளை வழங்கியதோடு, கல்வியில் சிறந்து விளங்கி, சமுதாய முன்னேற்றத்திற்காகவும், நாட்டின் நலனுக்காகவும் பாடுபட வேண்டும் என்று வாடிநத்தினார்கள். மேலும் மாணவ மாணவிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமைவதற்கு தன்னுடைய வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்கள்.
மேலும், மாண்புமிகு தமிடிநநாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள், மாநில அளவில் பரிசுகள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து அரசுப் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற உதவிய ஆசிரியப் பெருமக்களுக்கும், பெற்றோர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களிடமிருந்து ரொக்கப் பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்ட மாணவ, மாணவியர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு பள்ளிக்கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத் துறை,
தலைமைச் செயலகம், சென்னை. |