காயல்பட்டினம் குத்துக்கல் தெருவில், முஹ்யித்தீன் பள்ளியையொட்டி இயங்கி வருகிறது ரஹ்மத்துன் லில் ஆலமீன் மீலாது பேரியம். இவ்வமைப்பின் சார்பில், ஆண்டுதோறும் மீலாது பெருவிழா நடத்தப்படுவது வழமை. அந்த அடிப்படையில், நடப்பாண்டு நிகழ்ச்சிகள் இம்மாதம் 19ஆம் தேதி புதன்கிழமையன்று நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பறிக்கை வருமாறு:-
எமது ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம் சார்பாக இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 19-06-13.(ஹிஜ்ரி1434,ஷஹ்பான் பிறை-09) புதன்கிழமை நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிறந்த தின மீலாது பெருவிழா மற்றும் எங்கள் பேரியத்தின் 29-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சியினை வல்லோன் அல்லாஹ்வின் பெரும் துணை கொண்டு நனிசிறப்புடன் நடாத்திட நாடி உள்ளோம் என்பதை மிக மகிழ்வுடன் தெரிய தருகின்றோம்.
புனிதமிகு இனிய இந்நிகழ்வில் நாடறிந்த நாவலரும்,சன்மார்க்க சொற்பொழிவாளருமான சென்னை, அடையாறு பள்ளியின் தலைமை இமாம், மௌலானா,மௌலவி, அல்ஹாஜ் எம்.ஷதீதுத்தீன் ஆலிம் பாழில் பாக்கவி அவர்கள் சன்மார்க்க சிறப்புரையாற்றிட உள்ளார்கள்.
பேரியத்தின் முத்தாய்ப்பு நிகழ்வான உயர் கல்விக்கான உதவித்தொகை கடந்த ஆண்டுகளைப்போல் இந்த வருடமும் உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூலமாக தலா ஐந்து ஆயிரம் ரூபாய் வீதம் நான்கு பயனாளிகளுக்கு மொத்தம் இருபது ஆயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
சங்கைமிகு இனிய இவ்விழாவில் தாங்கள் யாவரும் கலந்து சிறப்பித்து தருமாறும் மிக்க மகிழ்வுடன் அழைக்கின்றோம்.
ரப்புல் ஆலமீனான எல்லாம் வல்ல அல்லாஹ் அகிலத்திற்கோர் அருட்கொடை யான ரஹ்மத்துன்-லில் ஆலமீன் நம் அண்ணல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் துஆ பொருட்டால் நம்மையும்,நம்மை சார்ந்த எல்லோரையும் எந்நாளும் சிறப்பாக்கி வைத்து இம்மை மறுமை வாழ்வை வெற்றியாக்கி வைத்தும் எல்லாவித ஹலாலான நாட்ட தேட்டங்களை நிறைவேற்றி தந்து நல்லருள் புரிவானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
என்றும் உங்கள் அன்பையும் ஆதரவையும் நாடும்..
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
ரஹ்மத்துன்-லில் ஆலமீன் மீலாது பேரியம்
மற்றும் பொது நலப்பேரவை (உதயம் - 1985 )
குத்துக்கல் தெரு ,காயல்பட்டினம்.
இவ்விழா குறித்து எமதமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம் உங்கள் பார்வைக்காக:-
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |