காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் சார்பில், ‘மவ்லவீ - ஆலிம் மஹ்ழரீ’ மற்றும் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டமளிப்பு விழா, இம்மாதம் 20ஆம் தேதி வியாழக்கிழமையன்று, கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
கல்லூரி தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம்.பாதுல் அஸ்ஹப் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், கல்லூரி முதல்வர் மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ ஃபைஜீ, பட்டம் பெறும் மாணவர்களுக்கு ஸனது வழங்கி, பட்டமளிப்புப் பேருரையாற்றுகிறார்.
புதுக்கோட்டை ஹிக்மத்துல் பாலிகா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.அப்துல் ஜப்பார் பாக்கவீ மற்றும் மஹ்ழரா அரபிக் கல்லூரியின் பேராசிரியர்கள் வாழ்த்துரை வழங்கும் இவ்விழாவில், அதிராம்பட்டினம் ரஹ்மானிய்யா அரபிக் கல்லூரியின் முதல்வர் மவ்லவீ கே.டி.முஹம்மத் குட்டி முஸ்லியார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
கல்லூரியில், 7 ஆண்டு பாடத்திட்டத்தின் கீழ் கற்றுத் தேர்ந்த 11 மாணவர்களுக்கு இவ்விழாவில், ‘மவ்லவீ ஆலிம் மஹ்ழரீ’ ஸனதும் (பட்டச் சான்றிதழ்), திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள ஒரு மாணவருக்கு, ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனதும் வழங்கப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை, கல்லூரி செயலாளர் ஹாஜி எம்.ஏ.எஸ்.அபூ தல்ஹா, துணைத்தலைவர் ஹாஜி வாவு எஸ்.காதிர் ஸாஹிப், துணைச் செயலாளர் ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீலுர்ரஹ்மான், கணக்குத் தணிக்கையாளர் (ஆடிட்டர்) ஹாஜி எம்.கே.முஹ்யித்தீன் தம்பி (துரை) ஆகியோரின் ஒருங்கிணைப்பில் குழுவினர் செய்து வருகின்றனர்.
பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும், மஹ்ழரா அரபிக் கல்லூரியின் www.mahlara.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திலும், காயல்பட்டினம் குத்பிய்யா மன்ஸிலின் www.quthbiyamanzil.org என்ற இணையதளத்திலும் நேரலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
விழா நிகழ்முறை குறித்து, கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம் வருமாறு:-
தகவல்:
ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத்
ஆசிரியர், மஹ்ழரா அரபிக்கல்லூரி.
மஹ்ழரா அரபிக்கல்லூரியின் கடந்த ஆண்டு பட்டமளிப்பு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |