சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமான பூவுலகின் நண்பர்கள் - விதையிலிருந்தே மரம் ... என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் இதழியல், எழுத்துக்கான பயிற்சிப் பட்டறை - மே 24, 25, 26 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய மூன்று தினங்களில் பாபநாசம் அருகே பொதிகை மலை அடிவாரத்தில் நடைபெற்றது.
பாபநாசம் டாணா விலக்கு ஷாலோம் திருமண மண்டபத்தில் உள்ள நெடுஞ்செழியன் அரங்கில் மே 24 - காலை 10:30 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து - சிறப்புரைகள், பயிற்சி பட்டறை, இயற்கை சூழல் பார்வையிடல், மலைப்பயணம் ஆகிய நிகழ்வுகள் மூன்று தினங்களாக நடைபெற்றன.
சென்னை, திருவண்ணாமலை, கோயம்புத்தூர், சேலம், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சுமார் 70 பேர் பட்டறையில் பங்கேற்றனர். இதில் மருத்துவர்கள், ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், திரையுலகினர், கவிஞர்கள், ஓவியர் உட்பட பலர் அடங்குவர்.
நிகழ்வு அரங்க முகப்பில் சூழலியல் தொடர்பான சஞ்சிகைகள், நூல்கள், குறு வட்டுக்கள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பயிற்சிப் பட்டறை தொடங்கியதிலிருந்து நிறைவு பெறும் வரை செயற்கை உரம், பூச்சி கொல்லி, வேதிப் பொருட்கள் எதுவும் கலவாத இயற்கை உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
எழுத்து மேடை மையம்
குறிப்பு:
காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் எழுத்து மேடை எழுத்தாளரும், சமூக பார்வையாளருமான சாளை பஷீர் இப்பட்டறையில் கலந்துக்கொண்டார். தனது அனுபவங்களை எழுத்து மேடை கட்டுரைகள் மூலம் விரைவில் பகிர்ந்து கொள்ளவுள்ளார். |