Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:01:59 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10984
#KOTW10984
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுன் 10, 2013
நெய்னார் தெருவில் கார் மோதி சேதமுற்ற மின் கம்பம் அகற்றம்! புதிய மின் கம்பம் நிறுவப்பட்டது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3229 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நெய்னார் தெருவில், பெரிய குத்பா பள்ளி – மன்பஉல் பரக்காத் சங்கத்திற்கிடையிலுள்ள பகுதியில், நேற்று (ஜூன் 09) இரவு 10.30 மணியளவில், அத்துமீறி ஓடிய – TN 22 K 1161 என்ற எண்ணுடைய சான்ட்ரோ கார் மின் கம்பத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதனால் அதிர்வுற்ற அந்த மின் கம்பத்தின் அடிப்பாகம் சிதைந்து சேதமுற்றது.

விபத்து நடந்த சில நிமிடங்களில், அங்கு வந்த மின்வாரிய அலுவலர்கள், அப்பகுதியில் மின் வினியோகத்தைத் துண்டித்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்ளதா என்பதைப் பார்த்தறிந்த பின்னர், சில நிமிடங்களில் மின்தடை நீக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (ஜூன் 10) மதியம் 02.30 மணியளவில், சேதமுற்ற மின் கம்பத்தை அகற்றி, அவ்விடத்தில் புதிய மின் கம்பத்தை நிறுவும் பணி, காயல்பட்டினம் மின்வாரிய அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டது.






Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மின் கம்பம்மாவது உடனடியா கொண்டு வந்துட்டாங்களே
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [10 June 2013]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 27880

மின்சார வாரியத்தை நிச்சயம் பாராட்டியே ஆகணும்.அவர்கள் மின்சாரம் கொடுக்கமுடியாவிட்டாலும்கூட பரவாயில்லை., மின் கம்பம்மாவது உடனடியா கொண்டு வந்துட்டாங்களே . வெரி குட் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [10 June 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27881

சபாஸ்..!

24 மணி நேரத்திற்குள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்ட மின்வாரியத்திற்கு நன்றிகள் பல.

சேதமுற்ற மின்கம்பம் கவனிக்கப்படாமல் போகும், ஹிஜாஸ் மைந்தன் புகைப்படம் எடுத்து போடுவார், பலரும் கண்டனத்தை பதிவு செய்வார்கள்.. என்றல்லவா நினைத்தேன்... வெல்டன் ஆபீசர்ஸ்..வெல்டன்..!

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by M.S.Kaja Mahlari (Singapore) [10 June 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 27882

மிக விரைவாக நடவடிக்கை எடுத்து பழுதான மின்கம்பதை மாற்றி புதிய மின்கம்ப வேலைகளை துரித கதியில் நடவடிக்கை எடுத்த காயல் பட்டணம் மின்சார வாரியத்துக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. செதப்படுதியவரிடம் நஷ்டஈடு
posted by FATHIMA (Saudi Arabia) [10 June 2013]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27886

துரித நடவடிக்கை எடுத்த மின்வாரியதிற்கு பாராட்டுக்கள். அத்துமீறி காரை ஒட்டி மின்கம்பத்தை சேதப்படுத்தியதற்கு நஷ்டஈடு வாங்கினால் தான் பொதுமக்களுக்கும் சிறிதாவது பொதுச்சொத்தை பேணக்கூடிய அக்கறை வரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கட்டுப்பாடில்லாமல் ...
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [10 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27889

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

விபத்து நடந்ததில் உயிர் சேதம் ஏற்படவில்லை, பெருங்கொண்ட காயம் ஏற்படவில்லை என்பதோடு எந்த விதமான விபரீதமும் ஏற்படாமல் காத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.

---------------------------------------------

மின் வாரியத்திற்கு பாராட்டுக்கள்

விபத்து நடந்த உடனே அப்பகுதி மின் விநியோகத்தை துண்டித்து - பாதிப்பில்லை என்பதை ஊர்ஜிதம் செய்தபின் மீண்டும் மின் விநியோகம் கிடைக்க செய்த மின் வாரிய ஊழியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

மேலும் சேதமுற்ற மின் கம்பம் அகற்றப்பட்டு புதிய மின் கம்பத்தை துரிதமாக நிறுவிய மின் வாரியத்திற்கு பாராட்டுக்கள்.

--------------------------------------------

தண்டனையைக் கொடுக்க வேண்டும்

காரை ஓட்டியவர் ஒட்டுனர் உரிமம் பெற்றவரா அல்லது ஒட்டுனர் உரிமம் இல்லாதவரா என்பதை அறிந்து, விபத்துக்கான உண்மையான காரணமும் ஆராயப்பட்டு தவறு புரிந்தவர்களுக்கு தண்டனையைக் கொடுக்க வேண்டும்.

சேதமடைந்த மின் கம்பம் மாற்றப்பட்டிருக்கிறதே! அதற்கான செலவும் வசூலிக்கப்பட வேண்டும்.

தப்பு செய்பவர்களுக்கு தண்டனையோ! அபராதமோ விதிக்கப்படாவிட்டால் – தப்புகளும், தவறுகளும் மலிந்துவிடும். மக்களின் உயிருக்கும் , உடமைக்கும் சேதங்கள் தொடர்ந்து கொண்டேதானிருக்கும்.

------------------------------------------- கட்டுப்பாடில்லாமல் வாகனங்களின் தேவை அதிகரித்துவிட்டதால் நமது ஊரில் வாகனங்கள் பெருகிவிட்டது இது காலத்தின் கட்டாயம். ஆனால் வாகனங்களை ஊரின் உள்ளே தெருக்களில் கட்டுப்பாடில்லாமல் ஓட்டிச்செல்கிறார்கள் என்பதே நமக்கு கவலையை அளிக்கிறது – இது கண்டிக்கப்பட வேண்டிய விசயம்.

-------------------------------------------

காலையோ, கையையோ விபத்துகளால் இழக்கிறார்

இரு சக்கர வாகனங்களின் கட்டுப்பாடற்ற ஒட்டம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நம் ஊரில் இருசக்கர வாகன விபத்துகள் ஒரு டஜனுக்கு குறையாமல் மாதாமாதம் ஏற்படுகிறது.

மேலும் சமீப காலமாக ஒவ்வொரு மாதமும் நமது ஊர் இளைஞர்களில் குறைந்தபட்சம் ஒருவர் தனது காலையோ, கையையோ இருசக்கர வாகன விபத்துகளால் இழக்கிறார் – முழுமையான இழப்பு இல்லை என்றாலும் முழுமையான செயல்பாட்டை இழக்கிறார் என்பது கண்கூடு.

என்னைப் பொருத்தவரை இதற்கு முழு முதல்காரணம் பெற்றோர்களின் கவனக்குறைவும் அவர்கள் தம் மக்களுக்கு கொடுக்கும் செல்லமுமே ஆகும்.

அவர்கள் அறிந்தோ அறியாமலோ தம் மக்களுக்கு கொடுக்கும், செல்லத்தினாலும், கவனக்குறைவினாலும் அவர்கள்தம் மக்களின் ஆரோக்கியமான வாழ்வைக் கெடுக்கிறாகள் என்பதே எனது குற்றச்சாட்டாகும்.

எனவே பெற்றோர்கள் தங்கள் மக்கள் மீது கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...கண்ணுப் பட போகுதய்யா....
posted by Muhammad Nooh KA (Sharafiyyah, jeddah) [11 June 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27892

மாஷா அல்லாஹ்...மின்வாரியத்தின் துரித நடவடிக்கையின் காரணமாக அப்பிரச்சனை முடிந்தது. ஆனால் தவறு செய்த நபர்கள் தப்பித்துவிட்டார்களே?தலைமறைவாகிவிட்ட அந்த நபரை கண்டுபிடித்து உரிய சேத தண்டத்தை வசூலிக்க வேண்டும். பொதுசொத்துக்கும், பொதுமக்களுக்கும் முறையே நஷ்டத்தையும், ஆபத்தையும் உண்டாக்கும் வீணர்களுக்கு இவ்வாறு செய்தால்தான் ஒரு பாடமாக அமையும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved