காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபையின் 86ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 10.05.2013 வெள்ளிக்கிழமை (இன்று) இரவு 07.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படும்.
ரஜப் 28ஆம் நாள் (ஜூன் 08ஆம் தேதி - நேற்று) நிகழ்ச்சி, காலையில் துவங்கியது. நேற்று ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, இலங்கை – கொழும்பிலுள்ள அல்ஜாமிஉல் அழ்ஃபர் சம்மாங்கோட் பள்ளியின் இமாமும், காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் கவுரவ பேராசிரியருமான மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ வழங்கினார்.
துஆ – பிரார்த்தனை, பித்அத் விளக்கம் உள்ளிட்ட தலைப்புகளில் அந்த உரை அமைந்திருந்தது.
அவரைத் தொடர்ந்து, இமாம் புகாரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சரித உரையை, ‘அல்அஸ்ரார்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ வழங்கினார்.
நேற்றிரவு மஃரிப் தொழுகைக்குப் பின், இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மீதான மவ்லித் மஜ்லிஸும், இமாம் இப்னு ஹஜர் அல்ஹைத்தமீ, மஹான் அஜ்மீர் காஜா முஈனுத்தீன் ஜிஷ்தீ ரஹ்மத்துல்லாஹி அலைஹிமா ஆகியோர் மீதான புகழ்மாலை - மர்ழிய்யாவும், காயல்பட்டினம் பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியின் இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எச்.மவ்லானா ஸாஹிப் தலைமையில் நடைபெற்றது. கடைப்பள்ளி இமாம் ஹாஜி எம்.ஐ.செய்யித் முஹம்மத் புகாரீ தங்ஙள் துஆவுடன் மஜ்லிஸ் நிறைவுற்றது.
இன்று, ரஜப் 29ஆம் நாள் (ஜூன் 09) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தூத்துக்குடி மாவட்ட தலைவரும், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ வழங்குகிறார்.
அவரைத் தொடர்ந்து, இமாம் ஷாஃபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சரித உரையை, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்ழரீ வழங்குகிறார்.
இன்று மாலை 04.30 மணிக்கு, இமாம் புகாரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மீது, மாதிஹுல் புகாரீ அல்லாமா அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் முஹம்மது இஸ்மாஈலுந் நஹ்விய்யுல் முஃப்தீ அவர்களால் தொகுக்கப்பட்ட மின்ஹத்துல் பாரீ ஃபீ மித்ஹதில் புகாரீ எனும் மவ்லிதும், முஸ்லிம் இமாம் மீதான பைத்தும், மவ்லவீ ஹாஃபிழ் கே.எஸ்.கிதுறு முஹம்மத் ஃபாஸீ தலைமையில் நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் ஷெய்கு ஹுஸைன் பள்ளியின் இமாம் ஹாஃபிழ் என்.டி.ஷெய்கு சுலைமான் லெப்பை துஆவுடன் இன்றைய நிகழ்ச்சிகள் நிறைவுறும்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
நடப்பாண்டில் ஒவ்வொரு நாளும் ஆற்றப்படும் உரைகளின் ஒலிப்பதிவுகளையும், முந்தைய ஆண்டுகளில் ஆற்றப்பட்ட உரைகளின் ஒலிப்பதிவுகளையும், http://www.bukhari-shareef.com/eng/audio/6/rajab-bayan-2013.html என்ற இணையதள பக்கத்தில் கேட்கவும், பதிவிறக்கம் செய்துகொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
ரஜப் 27ஆம் நாள் நிகழ்வுகள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |