| 
  பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) அரசு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. 
  
இம்முடிவுகளின்படி, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் மருத்துவரான டாக்டர் வி.பாவநாசகுமார் - வி.வசந்தி தம்பதியின் மகளும், திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகடமி மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மாணவியுமான பி.அனுஜா, 500க்கு 496 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். 
  
பாடவாரியாக இம்மாணவி பெற்ற மதிப்பெண்கள்: 
  
தமிழ் 098 
ஆங்கிலம் 099 
கணிதம் 100 
அறிவியல் 099 
சமூக அறிவியல் 100 
மொத்த மதிப்பெண்கள் 496
  
இது, தமிழ்நாடு மாநில அளவில் மூன்றாமிடமும், தூத்துக்குடி மாவட்ட அளவில் இரண்டாமிடமும், தூத்துக்குடி கல்வி மாவட்ட அளவில் முதலிடமும் ஆகும். 
  
இம்மாணவியை, பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பாராட்டினர். 
  
தகவல் & படங்கள்:  
ஹிஜாஸ் மைந்தன் 
செய்தியாளர் - காயல்பட்டணம்.காம் 
  |