எழுத்தாளரும், ஓவியருமான காயல்பட்டினம் ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ்.மாமா நடத்தும், ஏ.எல்.எஸ்.ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில், பள்ளி செல்லும் மாணவ-மாணவியரின் கோடை விடுமுறையையொட்டி, ஆண்டுதோறும் உருவமற்ற ஓவிய பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழமை.
நடப்பாண்டு உருவமற்ற ஓவியப் பயிற்சிகள் காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளி எதிரிலுள்ள ரஹ்மானிய்யா மழலையர் பள்ளி வளாகத்திலும், பஞ்சாயத்து வீதியிலுள்ள எஸ்.இ.ஹஸன் என்பவரின் மகள் ஐதுரூஸ்மா என்பவரின் அல்மர்ஹமா இல்லத்திலும் நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்புகளில், Basic Arts, Outlines, Mixing Colours, Box Arts, A to Z Arts, 1 to 9 Arts உட்பட பலவிதமான ஓவியப் பயிற்சிகள் மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்டது.
பஞ்சாயத்து வீதி அல்மர்ஹமா இல்லத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளின் நிறைவு நாள் நிகழ்ச்சியின்போது, புதுக்கடைத் தெருவைச் சேர்ந்த மாணவி மைமூன் பீவி, மர்யம் மஃப்ரூஹா, நெய்னார் தெருவைச் சேர்ந்த மாணவி எச்.ஆர்.ஃபாத்திமா ஹுமைரா ஆகியோரின் ஓவியங்கள் சிறந்த ஓவியங்களாகத் தேர்வு செய்யப்பட்டன.
ரஹ்மானிய்யா மழலையர் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளின் நிறைவு நாள் நிகழ்ச்சியின்போது, கே.டி.எம். தெரு மாணவர் ஃபஹத், மகுதூம் தெரு மாணவர் பி.ஷேக் அப்துல் காதிர், சொளுக்கார் தெரு மாணவர் எம்.எஸ்.அத்னான் ஃபாஸீ ஆகியோரின் ஓவியங்கள் சிறந்த ஓவியங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இவர்களுக்கான பரிசுகள் விரைவில், அவர்களது பெற்றோருக்கு அனுப்பி வைக்கப்படும் என, ஏ.எல்.எஸ். ஓவியப்பள்ளி நிறுவனரும், நடத்துநருமான ஏ.லெப்பை ஸாஹிப் என்ற ஏ.எல்.எஸ்.மாமா தெரிவித்துள்ளார்.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன் |