காயல்பட்டினம் நல அறக்கட்டளை (KWT) சார்பில், நாகர்கோயில் ஜெயசேகரன் மருத்துவமனையுடன் இணைந்து, இம்மாதம் 09ஆம் தேதியன்று - மருத்துவ பரிசோதனை இலவச முகாம் நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து, காயல்பட்டினம் நல அறக்கட்டளை தலைவர் ஹாஜி எஸ்.ஐ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
நமதூர் மக்களின் நலன் கருதி, இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 09ஆம் தேதியன்று மருத்துவ இலவச முகாம் நடத்த எமது காயல்பட்டினம் நல அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, பின்வருமாறு பிரசுரம் வெளியிட்டுள்ளோம்:-
பொதுமக்கள் இந்த முகாமை அவசியம் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு, காயல்பட்டினம் நல அறக்கட்டளை தலைவர் ஹாஜி எஸ்.ஐ.அபூபக்கர் தெரிவித்துள்ளார். |