உலகெங்கும் வாழும் மக்கள் தங்களின் வீடுகளையும் அலுவலகங்களையும் அலங்கரித்து மெருகூட்டி பாதுகாத்திட வண்ண வண்ண பெயிண்ட் வகைகளை பயன்படுத்தி வருகிறார்கள்.
பல்வேறுபட்ட மூலப்பொருள்களினால் தயாரிக்கப்படும் PAINT இல் LEAD எனும் வேதிப்பொருளும் அடங்கும். சமீபத்தில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் PAINT வகைகளை ஆய்வுக்குட்படுத்தப்பட்ட போது அனைத்து நிறுவனங்களின் paint வகைகளிலும் மனித ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பல்வேறுப்பட்ட நோய்களை உருவாக்கும் LEAD வேதிப்பொருள் அனுமதிக்கப்பட்டதை விட மிக அதிக அளவில் கலந்திருப்பது கண்டறியப்பட்டது.
இந்த ஆபத்தான வேதிப்பொருளை PAINT இலிருந்து முற்றாக நீக்கிட ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரணையில் மேற்சொன்ன 10 நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் PAINT உற்பத்தியாளருக்கு விசேடமான அறிவூட்டல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் LEAD ஐ தங்களது தயாரிப்புகளில் இருந்து முற்றாக நீக்கிட வேண்டும் என அறிவுறுத்தியது.
அந்த வகையிலே கொழும்பில் paint உற்பத்தியாளர்களுக்கு CENTRE FOR ENVIRONMENTAL JUSTICE அமைப்பினரால் பல கருத்தரங்குகள் நடத்தப்பட்டு கடந்த 1-1-2013 முதல் PAINT களில் LEAD பயன்ப்படுத்துவதை இலங்கை அரசு முற்றாக தடை செய்தது.
இது சம்பந்தமாக இலங்கையில் நடத்தப்பட்ட அனைத்து கருத்தரங்குகளிலும் கொழும்பில் இயங்கிவரும் BERLUX PAINTS(PVT)LIMITED உற்பத்தி நிறுவனம் பங்குபற்றியது. அத்தோடு தனது தயாரிப்புகளில் LEAD க்கு பதிலாக மாற்று மூலப்பொருளை பயன்படுத்தி " LEAD FREE PAINT " வகைகளை சந்தையில் அறிமுகப்படுத்தியதன் மூலம் அல் - ஜெஸீரா தொலைக்காட்சி செய்தி அறிக்கையில் இடம் பிடித்தது.
அந்த செய்தியைக்காண இங்கே அழுத்தவும்.
http://www.youtube.com/watch?v=ICmfBlhykOo
தகவல்:
எஸ்.ஐ. புஹாரி,
கொழும்பு. |