தேர்தல் புறக்கணிப்பு என்ன பயன்? posted byசாளை.S .I . ஜியாவுதீன் (அல்கோபார் )[22 February 2011] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 2772
அனைவர்களின் கருத்துக்களும் மதிக்கப்படக்கூடியவையே.
சகோ.Sayna நன்றாக கருத்து தெரிவிக்கின்றார், ஆனால் படிப்பதில் தான் சிரமம் உள்ளது. முழுமையாக ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ எழுதினால் நலம். கருத்து அனைவர்களுக்கும் செல்லும்.
அடுத்து, அதிகமானவர்களின் கருத்து தேர்தல் புறக்கணிப்பு. சரி அப்படி புறக்கணித்து என்ன பயன்? விழுந்த ஓட்டுகளில் யார் ஒரு ஓட்டு அதிகம் பெறுகின்றாரோ அவர்தான் அடுத்த MLA /MP.
நாம் ஒற்றுமையுடன் இருந்து ஒருவருக்கே நம் ஓட்டுகளை போடலாம் என்றால், அதிலும் தலைசுற்றல். நம் சமுதாயம் எப்படி பிரிந்து உள்ளது என்று பாருங்கள்..
1. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
2. இந்திய தேசியலீக்
3. தேசியலீக் கட்சி
4. தமிழ் மாநில தேசிய லீக் (அல்தாப்)
5. தமிழ் மாநில முஸ்லிம் லீக்(ஷேக் தாவூத்)
6. தமிழ்நாடு முஸ்லிம் லீக் (தாவுத் மியக்கான்)
7. தமிழ்நாடு மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் (சலிமுத்தீன்)
8. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்
9. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
10. இஸ்லாமிய இலக்கியக் கழகம்
11. இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம்
12. முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழகம்
13. மனிதநேய மக்கள் கட்சி
14. மனிதநேய மக்கள் முன்னேற்ற கழகம் (பாலை ரபீக்)
15. ஜனநாயக முஸ்லிம் முன்னேற்ற கழகம் (சென்னை ஹமீத்)
16. ஜனநாயக மக்கள் கட்சி
17. இந்திய தேசிய மக்கள் கட்சி
18. இந்திய தேசிய மக்கள் கட்சி (குத்புதீன் ஐபக்)
19. தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்
20. இந்திய தவ்ஹீது ஜமாத்
21. இந்திய தவ்ஹீத் ஜமாத் டிரஸ்ட்
22. மறுமலர்ச்சி தவ்ஹீத் ஜமாஅத் (இணையதளம்)
23. ஜமாத் இ இஸ்லாமி
24. ஜமாத்துல் உலமா
25. ஷரியத் பாதுகாப்பு பேரவை
26. இஸ்லாமிய இலக்கிய பேரவை
27. பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா
28. எஸ்.டி.பி.ஐ -சோசியல் டெமோகிராடிக் பார்ட்டி ஆப் இந்தியா
29. பாரதிய முஸ்லிம் பார்ட்டி (சித்தீக்)
30. மில்லி கவுன்ஸில்
31. மஜ்லிஸே முஷாவரத்
32. ஜம்மியத்துல் உலமா இ ஹிந்த்
33. தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன்
34. முஸ்லிம் தனியார் சட்டவாரியம்
35. ஜம்மியத்துல் உலாமா (அர்ஷத் மதனி
)
36. தமிழக முஸ்லிம் தொண்டு இயக்கம்
37. சிறுபான்மை புரட்சி இயக்கம் (லியாகத்அலிக்கான்)
38. சென்னை சுன்னத் ஜமாத் பள்ளி வாசல் கூட்டமைப்பு
39. தமிழ்நாடு சுன்னத்வல் ஜமாஅத் ஐக்கிய பேரவை (ஷேஹூ அப்துல்லாஹ் ஜமாலி)
ஒற்றுமையைப் பற்றி நாம் எப்படி அடுத்தவர்களுக்கு சொல்ல..!! BP தான் அதிகம் ஆகின்றது, extra ஒரு மாத்திரைக்கு தான் செலவு. வல்ல இறைவன் நல்ல வழியை காட்டட்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross