சத்தியப் பாதையில் உங்கள் இலட்சியப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்; பிரார்த்திக்கிறேன்.............. posted byஎஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் (Chennai)[03 June 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 27739
ஒரு மனிதர் முரண்பாடான இரண்டு முகங்களை காட்ட முடியுமா என தங்களை நினைக்கையில் பல நேரம் சிந்திதுப் பார்த்துள்ளேன்.
ஒரு பக்கம் மார்க்க விசயங்களில் வலுவான பற்று; மறுபக்கம் நீதி நியாயமற்ற சிந்தனையில் சாய்வு நிலை. ஒரு முஃமினிடம் இருக்க முடியாத பண்பு இது. அதற்கான விடை இப்போதுதான் கிடைத்துள்ளது.
இவர இவ்விசயத்தில் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார் என பல பிரச்சனைகளில் உங்கள் இடம் மாறி நின்ற காட்சிகளால் கவலையில் ஆழ்ந்துள்ளேன். ஷைத்தான் யாரைத்தான் கெடுக்காமல் விட்டான். கணவன் மனைவிக்கு மத்தியிலேயே சந்தேக எண்ணங்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பவனுக்கு பொதுக் காரியத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் ஜ்ல்லிக்கட்டை ஏற்படுத்துவதென்பது ஒரு சாதாரண விசயமே.
ஆனால் இப்போது ஷைத்தான் தோற்றுவிட்டான். நீங்கள் வென்றிருக்கிறீர்கள்.
நகராட்சியில் நிலைபெற்று கூட அவனை உங்களால் வீழ்த்தியிருக்க முடியும். அந்த சனியன் வென்று விட்டான்.
எனினும் நகராட்சிக்குதான் உங்களின் இராஜினாமா எல்லாம். அல்லாஹ்வுக்கு என்றென்றும் நீங்கள் கடமைப் பட்டவர்களே.
உங்களுக்கு அவன் வழங்கிய அறிவு, ஆற்றல், இன்னபிற திறமைகளுக்கு நீங்கள் கணக்கை கொடுத்தாக வேண்டும்.
சத்தியப் பாதையில் உங்கள் இலட்சியப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்; பிரார்த்திக்கிறேன்.
உங்களன்பு இஸ்லாமிய சகோதரன்,
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross