Re:... posted bykulam Ahmed Mohideen (jeddah KSA)[05 June 2013] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27788
ஆரியப் பார்ப்பனர்கள் கலைஞர் என்றாலே கரித்துக் கொட்டுவது ஏன்? ஒரு கடும் பகைமையைக் அவர் மீது காட்டுவது ஏன்? செத்துத் தொலைக்க மாட்டாரா?! என்ற வயிற்றெரிச்சலுக்கு வடிகாலாக, அவ்வப்போது வதந்தி பரப்பி அரிப்புத் தீர்க்கும் ஆத்திரம் எதனால்?
வேறொன்றும் இல்லை, இவரை ஒழித்து விட்டால், நம் கூத்தை, தாண்டவத்தை, ஆதிக்கத்தைத் தடையின்றி நடத்தலாமே என்ற ஏக்கம்!
ஒருவர் தன் கொள்கையில், தன் பணியில், தன் செயலில் மிகச்சரியாகவும், புரளாமலும், நழுவாமலும், உறுதியாகச் செயல்படுகிறார் என்பதற்கு அவரால் பலன் பெறுவோர் கொடுக்கும் பாராட்டுகளை விட எதிரிகள் கொடுக்கும் கடுமையான எதிர்ப்பும், தாக்குதலும், ஏச்சும் பேச்சும்தான் உண்மையான தரச்சான்று பெற்ற பாராட்டாகும்.
நீதிமன்ற வாசலைக் கூட மிதிக்க முடியாதிருந்த ஒரு சாதிக்காரனை, நீதிபதியாகவே உட்கார வைத்துவிட்டாரே! அதுவும் 12ஆவது இடத்தில் இருந்த ஆதி திராவிடர் வரதராஜனை அல்லவா நீதிபதியாய் உட்கார வைத்து, நம்மை குனிந்து கும்பிடு போட வைத்து விட்டாரே!
இஸ்லாமியனை நமது ஊடகங்களெல்லாம் தீவிரவாதி என்று சொல்லும்பொழுது இரண்டு முறை உளவுத்துறைக்கு தலைவராக ஒரு ஜாபர் சேட்டையும், ஜாபர் அலியையும் ஆக்கிவிட்டரே
தமிழை நீசபாசை என்று ஒதுக்கி வைத்தோம் அதை கோயிலில் பூசை பாசையாக்கிவிட்டாரே! நம் மொழிக்கு கிடைத்த செம்மொழித் தகுதியை தமிழ் மொழிக்கும் பெற்று விட்டாரே!
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய், புராண கதையெல்லாம் எழுதி, பிரபவ... நந்தன, விஜய... விரோதகிருது என்று சமஸ்கிருத ஆண்டை தமிழாண்டு என்று நாம் ஏமாற்றி வந்ததை, ஒரு உத்தரவைப் போட்டு தூக்கிலிட்டு, தை ஒன்று தான் தமிழாண்டுப் பிறப்பு என்று சட்டம் போட்டுவிட்டாரே!
உலகத்திலே உயர்வான நூலகத்தை தமிழுக்கு உருவாக்கி விட்டாரே! இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு கொடுத்து நம் பிழைப்பைக் கெடுத்து விட்டாரே!
பொம்பளைங்களுக்கு சொத்துரிமை கொடுத்து சமமாக்கி விட்டாரே!
மேடைப்பேச்சில் சாதனைப்படைக்கிறார். இலக்கியத்தில் கலக்குகிறார், அரசியலில் ஆட்சி செய்கிறார், கட்சியை கலையாது, நிலைகுலையாது நிலை நிறுத்துகிறார். ஒவ்வொரு நூலும் எழுதுகிறார், நிற்க முடியாது போனாலும், சக்கர நாற்காலியில் நகர்ந்தப்படியே சாதனை புரிகிறார், இந்திய தலைவரெல்லாம் ஓடோடிவந்து பார்க்கிறார்கள்.
பல முறை கட்சி உடைந் தாலும் பலமாக்கிக் காட்டுகிறார், நம்ம சூழ்ச்சிகள் எல்லாவற்றையும் சுக்கல் நூறாக்குகிறார். சாய்த்து கீழே தள்ளி விட்டோம் என்று சற்று மூச்சு வாங்கு வதற்குள் எழுந்து உட்கார்ந்து கொள் கிறார்! என்ன மனுசனய்யா இவர்! இதுதானே உங்கள் வயிற்றெரிச்சல்! எரியட்டும்! நன்றாக எரியட்டும்!!
நீங்கள் எத்தனை பேர் ஒன்று சேர்ந்து எத்தனை சூழ்ச்சி செய்தாலும், அவரை ஒன்றும் அசைக்க முடியாது. அரசியலில் வாக்குகள் வேண்டுமானால் அறியாமை யால் மாறலாம்.
ஆட்சியிலிருந்து அகற்றி விட்டதை சாதனையாக நினைக்காதீர்கள்! தமிழர் கள் தவறுவார்கள், ஆனால் தடம் புரள மாட்டார்கள்! சவுண்டிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள்!
வாழ்க கலைஞர்
வளர்க தமிழ்
குளம் அபு மிஸ்பாஹ்
ஜெட்டாஹ்
Moderator: கருத்தாளர்கள் தமது சொந்தக் கருத்துக்களை மட்டும் பதிவு செய்தல் நலம். தவிர்க்கவியலாத காரணங்களால் பிறரது ஆக்கங்களை கருத்துக்களாகப் பதிவு செய்வதாயின், அதன் Sourceஐயும் காண்பித்தே பதிவு செய்க!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross