Re:.மாற்றி யோசியுங்கள் . posted bymackie noohuthambi (colombo)[07 June 2013] IP: 223.*.*.* India | Comment Reference Number: 27823
IT IS A SMALL STEP FORWARD BUT A GREAT LEAP FOR MANKIND.
மாற்றி யோசியுங்கள். மாற்றம் ஒன்றுதான் உலகில் மாறாதது. வண்ணங்கள் செய்யும் மாயங்கள் உலகில் கொடிகட்டிபறக்கிறது. வீடு கட்டுவது கூட பெரிதாக தெரியவில்லை. அந்த வீட்டு சுவர்களுக்கு என்ன வண்ணம் பூசினால் இல்லத்தரசிக்கு மகிழ்வூட்டும். படுக்கையறை கூட அதற்கு விதிவிலக்கு அல்ல.
இந்த கால கட்டத்தில் லீட் என்ற ஒரு நச்சு கலந்திருக்கிறது என்று சொன்ன மாத்திரத்தில் அதை அகற்ற முற்பட்டுள்ள சகோதரர் இஸ்மாயில் புகாரி பெருளுக்ஸ் நிறுவனத்தினர் பாராட்டுக்கு உரியவர்கள். பணத்தின் மீது தான் பக்தி என்ற பின் பந்த பாசமே ஏதடா.. பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாருமே அண்ணன் தம்பிகள் தானடா. வாழ்த்துக்கள்.
பணம் வாழ்க்கைக்கு தேவைதான் ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை என்று வாழ்வது வாழ்வாகாது என்பதை செயலில் காட்டியுள்ளார்கள். வண்ண மயமான எதிர்காலம் உங்களை செங்கம்பளம் விரித்து வரவேற்கும்.
பேச்சிலே இனிமே, தொழிலிலே நேர்மை பொது வாழ்விலே தூய்மை இவற்றை தங்கள் மூலதனமாக,வாழ்வியல் தத்துவமாக கொண்டு தொழில் புரிபவர்களுக்கு வெற்றிகள் தொடரும்,. இறைவனின் உதவி துணை நிற்கும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross