கட்டுப்பாடில்லாமல் ... posted byN.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் )[10 June 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27889
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
விபத்து நடந்ததில் உயிர் சேதம் ஏற்படவில்லை, பெருங்கொண்ட காயம் ஏற்படவில்லை என்பதோடு எந்த விதமான விபரீதமும் ஏற்படாமல் காத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.
---------------------------------------------
மின் வாரியத்திற்கு பாராட்டுக்கள்
விபத்து நடந்த உடனே அப்பகுதி மின் விநியோகத்தை துண்டித்து - பாதிப்பில்லை என்பதை ஊர்ஜிதம் செய்தபின் மீண்டும் மின் விநியோகம் கிடைக்க செய்த மின் வாரிய ஊழியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
மேலும் சேதமுற்ற மின் கம்பம் அகற்றப்பட்டு புதிய மின் கம்பத்தை துரிதமாக நிறுவிய மின் வாரியத்திற்கு பாராட்டுக்கள்.
--------------------------------------------
தண்டனையைக் கொடுக்க வேண்டும்
காரை ஓட்டியவர் ஒட்டுனர் உரிமம் பெற்றவரா அல்லது ஒட்டுனர் உரிமம் இல்லாதவரா என்பதை அறிந்து, விபத்துக்கான உண்மையான காரணமும் ஆராயப்பட்டு தவறு புரிந்தவர்களுக்கு தண்டனையைக் கொடுக்க வேண்டும்.
சேதமடைந்த மின் கம்பம் மாற்றப்பட்டிருக்கிறதே! அதற்கான செலவும் வசூலிக்கப்பட வேண்டும்.
தப்பு செய்பவர்களுக்கு தண்டனையோ! அபராதமோ விதிக்கப்படாவிட்டால் – தப்புகளும், தவறுகளும் மலிந்துவிடும். மக்களின் உயிருக்கும் , உடமைக்கும் சேதங்கள் தொடர்ந்து கொண்டேதானிருக்கும்.
-------------------------------------------
கட்டுப்பாடில்லாமல் வாகனங்களின் தேவை அதிகரித்துவிட்டதால் நமது ஊரில் வாகனங்கள் பெருகிவிட்டது இது காலத்தின் கட்டாயம். ஆனால் வாகனங்களை ஊரின் உள்ளே தெருக்களில் கட்டுப்பாடில்லாமல் ஓட்டிச்செல்கிறார்கள் என்பதே நமக்கு கவலையை அளிக்கிறது – இது கண்டிக்கப்பட வேண்டிய விசயம்.
-------------------------------------------
காலையோ, கையையோ விபத்துகளால் இழக்கிறார்
இரு சக்கர வாகனங்களின் கட்டுப்பாடற்ற ஒட்டம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நம் ஊரில் இருசக்கர வாகன விபத்துகள் ஒரு டஜனுக்கு குறையாமல் மாதாமாதம் ஏற்படுகிறது.
மேலும் சமீப காலமாக ஒவ்வொரு மாதமும் நமது ஊர் இளைஞர்களில் குறைந்தபட்சம் ஒருவர் தனது காலையோ, கையையோ இருசக்கர வாகன விபத்துகளால் இழக்கிறார் – முழுமையான இழப்பு இல்லை என்றாலும் முழுமையான செயல்பாட்டை இழக்கிறார் என்பது கண்கூடு.
என்னைப் பொருத்தவரை இதற்கு முழு முதல்காரணம் பெற்றோர்களின் கவனக்குறைவும் அவர்கள் தம் மக்களுக்கு கொடுக்கும் செல்லமுமே ஆகும்.
அவர்கள் அறிந்தோ அறியாமலோ தம் மக்களுக்கு கொடுக்கும், செல்லத்தினாலும், கவனக்குறைவினாலும் அவர்கள்தம் மக்களின் ஆரோக்கியமான வாழ்வைக் கெடுக்கிறாகள் என்பதே எனது குற்றச்சாட்டாகும்.
எனவே பெற்றோர்கள் தங்கள் மக்கள் மீது கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross